ஆகாயகங்கை அருவி

ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள ஐயாற்றின்மீது அமைந்துள்ளது. கொல்லிமலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது.[1]

ஆகாயகங்கை அருவி
Kolli Malai Aagaya Gangai Falls.jpg
ஆகாயகங்கை அருவி
அமைவிடம்கொல்லிமலை, நாமக்கல்
மொத்த உயரம்300 அடி

அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலைப் பகுதியை அடைகிறது.

இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கல்லில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகுப்பயணம் மேற்கொள்ளும் இடமும் உள்ளது.

வெளி இணைப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "KOLLI HILL STATION". Tamilnadu Tourism. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாயகங்கை_அருவி&oldid=3118999" இருந்து மீள்விக்கப்பட்டது