ஈரமான ரோஜாவே (தொலைக்காட்சித் தொடர்)

2018 தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்

ஈரமான ரோஜாவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் 9 ஜுலை 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி 14 ஆகத்து 2021 ஆம் ஆண்டு அன்று 807 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]

ஈரமான ரோஜாவே
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
எழுத்துசந்துரு துரையப்பா
இயக்கம்பிரான்சிஸ் கதிரவன் (1-211)
ரிஷி (212-450)
ரவி பிரியன் (450-807)
நடிப்பு
முகப்பு இசைஎம்ஆர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்807
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுரமேஷ் துரை
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 சூலை 2018 (2018-07-09) –
14 ஆகத்து 2021 (2021-08-14)
Chronology
பின்னர்நம்ம வீட்டு பொண்ணு

இந்த தொடரில் மலராக 'பவித்ரா' நடிக்கிறார். புதுமுக நடிகர் திரவியம் வெற்றியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்தத் தொடரை பிரான்சிஸ் கதிரவன், ரிஷி, மற்றும் ரவி பிரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவு ரமேஷ் துரை, இசை எம்ஆர்.[2] மலரின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள்தான் இந்தத் தொடரின் முக்கிய கரு.

கதைச்சுருக்கம் தொகு

பிரிந்திருக்கும் இரு குடும்பங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினரான மலரும் மாறனும் காதல் வலையில் விழுகின்றனர். தங்களது திருமணத்தின் வழியாக இரண்டு குடும்பங்களும் ஒன்று சேரும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், வாழ்கை வேறு திருப்பங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள், மாறன் ஒரு விபத்தில் இறக்கிறான். மேலும், சூழ்நிலை காரணமாக மாறனின் தம்பி வெற்றியை திருமணம் செய்து கொள்கிறார் மலர். வெற்றிதான் மாறனின் இறப்பிற்கு காரணம் என்று எண்ணுகிறார் மலர்.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

  • பவித்ரா - மலர் வெற்றி
    • மாறனின் முன்னாள் காதலி, தற்பொழுது வெற்றியின் மனைவி.
  • திரவியம் - வெற்றி
    • மாறனின்ன் சகோதரன், அஞ்சலியின் முன்னாள் காதலன், தற்பொழுது மலரின் கணவன்.
  • சியாம் - புகழேந்தி (மாறன், வெற்றியின் தம்பி)
  • சாய் காயத்ரி - அகிலா புகழேந்தி
    • மலரின் சகோதரி, புகழின் மனைவி.

மலர் குடும்பத்தினர் தொகு

  • கம்மபாண்டி - ராஜதுரை (மலரின் அப்பா)
  • பிரேமலதா - இந்திராணி ராஜதுரை (மலரின் அம்மா)
  • சித்ரா . மயிலு (மலரின் நண்பி)
  • ஷீலா - தேன்மொழி (தேனு மற்றும் மலரின் தங்கை)

வெற்றி குடும்பத்தினர் தொகு

  • வெங்கட் - நடராசன் (மாறன், வெற்றியின் அப்பா)
  • விஜிஷா - அன்புக்கரசி (மாறன், வெற்றியின் அம்மா)
  • நிஷா - ஈஸ்வரி தங்கராசு (வெற்றி மற்றும் மாறனின் சகோதரி, எதிரியானவர்)
  • ஜெமினி மணி - தாங்கரசு (ஈஸ்வரியின் கணவன்)
  • ரம்யா - பவனு (ஈஸ்வரியின் தங்கை)
  • குமரமூர்த்தி - இதயக்கனி (வெற்றியின் நண்பர்)
  • அக்சரா - செல்வி (வெற்றியின் தங்கை)
  • மதுரை மோகன் - மயிலசாமி (வெற்றியின் தாத்தா)

துணை கதாபாத்திரம் தொகு

  • பிரவீண் - அழகர் (எதிரியானவர்)
  • பபிதா - சந்தா (அழகரின் அம்மா)
  • பிரிட்டோ - மருது (அழகரின் நண்பன்)
  • சதிஷ் - பாண்டி (அழகரின் நண்பன்)
  • பூவை சுரேஷ் - பூசாரி
  • நிவிஷா - அஞ்சலி (வெற்றியின் முன்னாள் காதலி) (எதிரியானவர்)
  • பாரதி மோகன் - அம்பலவனம் (அஞ்சலியின் தந்தை)

முந்தைய கதாபாத்திரம் தொகு

  • குமரன் தங்கராஜன் - மாறன்
    • வெற்றியின் சகோதரன் மற்றும் மலரின் காதலன் (தொடரில் இறந்து விடடார்) (பகுதி:1-51)

மதிப்பீடுகள் தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2018 3.1% 4.3%
2019 3.2% 4.6%
2020 3.3% 4.7%
2.7% 3.8%
2021 2.9% 4.1%
2.9% 4.1%

மறு தயாரிப்பு தொகு

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
தெலுங்கு மனசிச்சி சூடு ஸ்டார் மா 14 அக்டோபர் 2019 ஒளிபரப்பில்
கன்னடம் ஜீவா ஹூவாகிதே ஸ்டார் சுவர்ணா 10 டிசம்பர் 2019 ஒளிபரப்பில்

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "'ஈரமான ரோஜாவே' – விஜய் டிவியில் புதிய தொடர்". 4tamilcinema.com. Archived from the original on 2018-07-12. பார்க்கப்பட்ட நாள் 2018-07-10.
  2. "விஜய் டிவியில் புதிய தொடர் - ஈரமான ரோஜாவே". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.

வெளி இணைப்புகள் தொகு

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி பிற்பகல் 2.30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ஈரமான ரோஜாவே அடுத்த நிகழ்ச்சி
- நம்ம வீட்டு பொண்ணு