குமரன் தங்கராஜன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

குமரன் தங்கராஜன் (10 மார்ச்சு 1992) என்பவர் தமிழ்நாட்டு நடனக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார்.

குமரன் தங்கராஜன்
பிறப்பு10 மார்ச்சு 1989 (1989-03-10) (அகவை 35)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடனக் கலைஞர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுஹாசினி (தற்போது வரை)

நடிப்புத் துறை

தொகு

ஆரம்பகாலத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார். அதை தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரவுதேவா என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார். 2009 இல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட 4 என்ற நடனப்போட்டியில் அப்சராவுடன் ஜோடியாக நடனம் ஆடி அரையிறுதி சுற்றில் வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து மானாட மயிலாட 5 இல் நடிகை சுஹாசினியுடன் ஜோடியாக நடனம் ஆடினார்.

2015 இல் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த திரைபபடத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி, நவ்தீப் போன்ற பலர் நடித்துள்ளார்கள். 2017 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி தொடரில் கதாபாத்திர நடிகராக அறிமுகமானார். இந்த தொடரில் நடிகர் செந்தில் குமார் மற்றும் நடிகை ஸ்ரீஜா சந்திரன் ஆகியோர் முன்னணிக்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

2018 இல் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே[1] என்ற தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ்[2] என்ற தொடரில் கதிர் என்ற முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிகை சித்ராவுக்கு ஜோடியாக நடிக்கின்றார். ஜோடி பன் அன்லிமிடெட் என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் நடிகை சித்திராவுடன் இணைத்து நடனம் ஆடி 2வது வெற்றியாளராக வந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
ஜோடி நம்பர் 1 பின்னணி நடனக்கலைஞர் விஜய் தொலைக்காட்சி
உங்களில் யார் அடுத்த பிரவுதேவா போட்டியாளராக
2009-2010 மானாட மயிலாட 4 கலைஞர் தொலைக்காட்சி
2010 மானாட மயிலாட 5 போட்டியாளராக
2017 மாப்பிள்ளை விஜய் தொலைக்காட்சி
2018 ஈரமான ரோஜாவே maran
2018–2023 பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
2018–2019 ஜோடி பன் அன்லிமிடெட் போட்டியாளராக
2019 ஸ்டார்ட் மியூசிக் விருந்தினராக

திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2015 இது என்ன மாயம்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2019 கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019 சிறந்த ஜோடி குமரன் & சித்திரா பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. "விஜய் டிவியில் புதிய தொடர் - ஈரமான ரோஜாவே". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
  2. "Upcoming New Vijay TV Serial "Pandiyan Stores"".
  3. "Jodi- Fun Unlimited returns to Vijay Television".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரன்_தங்கராஜன்&oldid=3832749" இலிருந்து மீள்விக்கப்பட்டது