காவ்யா செட்டி

இந்திய நடிகை

காவ்யா செட்டி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். 2011ஆம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். நம் துனியா நம் ஸ்டைல் என்னும் கன்னடத் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்னர் வணிக ரீதியான விளம்பரங்களில் நடித்துள்ளார்.

காவ்யா செட்டி
இஷ்தாகம்யா படப்பிடிப்பில் காவ்யா
பிறப்புமங்களூர், கர்நாடகம்,
 இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்காவ்யா எம். செட்டி
பணிதிரைப்பட நடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது வரை
உயரம்5 அடி 8 அங் (1.73 m)[1]
எடை55 கி.கி[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தொடக்ககால வாழ்க்கை

தொகு

காவ்யா, கர்நாடகத்தின் மங்களூரில் பிறந்தவர்.[2] இவர் துளுவர் இனத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது தந்தை மனோகர் செட்டி ஒரு பொருளாதார ஆசிரியர், தாய் வசந்தி ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவர். மங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், என்.எம்.ஏ.எம். தொழில்நுட்பக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டில் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

திரை வாழ்க்கை

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2013 நம் துனியா நம் ஸ்டைல் ராதா கன்னடம்
2013 ஐ லவ் யூ கீர்த்தி கீர்த்தி கன்னடம்
2014 நத்தூது தெலுங்கு
2014 அவம் தமிழ்
2014 சிவானி தமிழ் /தெலுங்கு தாமதமாகியது
2014 விஜயாதித்யா கன்னடம் படப்பிடிப்பில்
2015 இது என்ன மாயம் பல்லவி தமிழ்
2015 சூம் கன்னடம் படப்பிடிப்பில்
2016 இஷ்தாகம்யா கன்னடம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவ்யா_செட்டி&oldid=3996686" இலிருந்து மீள்விக்கப்பட்டது