உளியின் ஓசை

இளவேனில் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உளியின் ஓசை (Uliyin Osai) என்பது 2008 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இளவேனில் இயக்கிய இந்தப் படத்திற்கு மு. கருணாநிதி கதை, உரையாடலை எழுதியிருந்தார். இப்படத்தை சோசலிசக்கட்சி முருகேசன் தயாரித்தார். இப்படத்தில் வினீத் மற்றும் கீர்த்தி சாவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சரத் பாபு, மனோரமா, கோவை சரளா, கஞ்சா கறுப்பு ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான பின்னணி இசை, பாடல்களுக்கான இசையை இளையராஜா மேற்கொள்ள, ஒளிப்பதிவு பி. கண்ணன், படத்தொகுப்பு சுரேஷ் உர்ஸ் ஆகியோர் செய்திருந்தனர். படம் 2008 சூலை 4, அன்று வெளியிடப்பட்டது.

உளியின் ஓசை
இயக்கம்இளவேனில்
தயாரிப்புஎஸ். பி. முருகேசன்
கதைமு. கருணாநிதி
இசைஇளையராஜா
நடிப்புவினீத்
கீர்த்தி சாவ்லா
அக்சயா
சரத் பாபு
மனோரமா
கோவை சரளா
கஞ்சா கறுப்பு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்நத்தினி ஆர்ட்ஸ்
வெளியீடு4 சூலை 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கி.பி 1005 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. இராஜா இராஜா சோழன் (சரத் பாபு), அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் சோழ மரபின் சிறந்த மன்னர்கள். சிவனுக்காக அவர்கள் தஞ்சாவூரில் ஒரு கோயில் கட்ட விரும்புகிறார்கள். பெரிய கோயிலுக்கு சிற்ப வேலை செய்ய சிறந்த சிற்பியான இனியன் ( வினீத் ) என்ற அழகான இளைஞனை நியமிக்கின்றனர். இனியன் ஒரு நல்ல நடனக் கலைஞனும்கூட. இனியன் செதுக்கும் சிற்பங்களுக்கு முன்மாதிரியாக்க நின்று நடன அசைவு நிலைகளில் நிற்க சரியான பெண்ணைக் கண்டுபிடிக்க முடியால் தவிக்கிறார். இதற்கிடையில், அவர் ஒரு கிராமப் பெண்ணான சாமுண்டி ( கீர்த்தி சாவ்லா ) என்பவரைச் சந்திக்கிறார். அவள் ஒரு இடைச்சியான அழகி (மனோரமா) என்பவரின் பேத்தி என்று அறிமுகமாகிறாள், அவள் அழகியாக மட்டுமல்லாமல், நடனக் கலையில் சிறந்தவளாகவும் இருக்கிறாள். அவளை மாதிரியாக நிறுத்தி இனியன் சிற்பங்களை செதுக்குகிறான். நாட்கள் செல்லச் செல்ல இனியன் அவளை காதலிக்கத் துவங்குகிறான். அவன் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தும்போது, அவள் சோழ அரசி என்பதால் அதனை மறுக்கிறாள். இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் சிற்பி அதிர்ச்சியூட்டும் ஒன்றைச் செய்கிறார். இது கதையின் முக்கியமான திருப்பமாகும்.

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

படத்திற்கு இளையராஜா இசையமைக்க, பாடல்களை காமகோடியன், மு. மேத்தா, முத்துலிங்கம், பழநிபாரதி, சினேகன், நா. முத்துக்குமார், வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்.[1]

  • "காலத்தை வென்ற" - பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி
  • "புலர்கின்ற பொழுது" - இளையராஜா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
  • "கல்லாய் இருந்தான்" - தன்யா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
  • "அழகை" - திப்பு, ஸ்வேதா
  • "அலையெல்லாம் சோழவள" - இளையராஜா, மது பாலகிருஷ்ணன், சைந்தவி
  • "அபிநயம் கட்டுகின்ற" - பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன்

விமர்சன வரவேற்பு

தொகு

படத்திற்கு ஒரு நல்ல எதிர்பர்ப்பு இருந்தது. ஆனால் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2]

விருதுகள்

தொகு

மு. கருணாநிதி 2008 இல் சிறந்த உரையாடல் எழுத்தாளராக தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றார்.[3] 2008 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை நடிகருக்காக தமிழக அரசு விருதை கோவை சரளா பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  2. Pavitra Srinivasan (7 July 2008). "Uliyin Osai fails". பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
  3. "Rajini, Kamal win best actor awards". The Hindu. 29 September 2009. பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
  4. "Rajini, Kamal win best actor awards". 29 September 2009 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளியின்_ஓசை&oldid=4147067" இலிருந்து மீள்விக்கப்பட்டது