உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)
(உச்சிதனை முகர்ந்தால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உச்சிதனை முகர்ந்தால் 2011ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். சூலை 31, 2011 ஆம் திகதியன்று, லண்டனில் இதன் இசை வெளியீடு நடந்தது. 2011 தீபாவளியன்று லண்டனில் வெளியானது. 16 திசம்பர் 2011இல் திரைப்படம் இந்தியாவில் வெளியானது.[1]
உச்சிதனை முகர்ந்தால் | |
---|---|
இயக்கம் | புகழேந்தி தங்கராஜ் |
தயாரிப்பு | பி. ஸ்டீவன் சிறி பாலசுந்தரம் ரி. சிவகணேஷ் கே. ரமணன் விஜயசங்கர் |
கதை | தமிழருவி மணியன் (வசனம்) |
திரைக்கதை | புகழேந்தி தங்கராஜ் |
இசை | டி. இமான் |
நடிப்பு | நீனிக்கா சத்தியராஜ் சீமான் சங்கீதா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | பி. லெனின் |
கலையகம் | குளோபல் மீடியா |
மொழி | தமிழ் |
கதைக் களம்
தொகுமட்டக்களப்பு இளம்பெண் புனிதவதிக்கும் பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. புனிதவதியின் வாழ்க்கை, 2009 மார்ச் முதல் தேதி எப்படி சிதைந்து போகிறது என்பதை சொல்கிறது உச்சிதனை முகர்ந்தால்.
இசை
தொகுஇப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார்.[2]
விருதுகள்
தொகு- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது ( மூன்றாம் பரிசு)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uchithanai Mugarndhal on Dec 16". Sify. 2011-12-08. Archived from the original on 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
- ↑ "Uchithanai Mukarnthal". JioSaavn. 23 August 2011. Archived from the original on 22 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.