புட்டண்ணா கனகல்
எஸ் ஆர் புட்டண்ணா கனகல் (S. R. Puttanna Kanagal) (பிறப்பு: சுப்ரவேஷ்டி ராமசுவாமி சீதாராம சர்மா, 1 திசம்பர் 1933 - 5 சூன் 1985), 'சித்ர பிரம்மா' (திரைப்படங்களின் கடவுள்) என்று அன்பாக அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய திரைப்பட இயக்குநராக இருந்தார். மேலும் இந்தியாவில் இதுவரை இருந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2]
புட்டண்ணா கனகல் | |
---|---|
பிறப்பு | சுப்ரவேஷ்டி ராமசாமையா சீதாராம சர்மா 1 திசம்பர் 1933 கனகல் மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 5 சூன் 1985 பெங்களூர், இந்தியா | (அகவை 51)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | புட்டண்ணா, சீதாராம சர்மா, "சித்ரா பிரம்மா" |
பணி | திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1957–1985 |
வாழ்க்கைத் துணை | நாகலட்சுமி, ஆரத்தி (1976-1981) |
பிள்ளைகள் | 5 |
பின்னணி
தொகுபுட்டன்னா கனகல் முந்தைய மைசூர் அரசில் கனகல் என்ற கிராமத்தில் ராமசாமையா மற்றும் சுப்பம்மா ஆகியோருக்கு ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[3] இவர் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருந்தது. ஒழுக்கமான வேலையைப் பெற போராடினார். தான் ஒரு ஆசிரியராக, விற்பனையாளராக மற்றும் ஒரு வாகனத்தைத் துடைப்பவராகக் கூட பணியாற்றினார். விளம்பரப் பையனாக இவரது வேலை இவரை நாடகத்துக்கும் பின்னர் திரைப்படத்திற்கும் நெருக்கமாகக் கொண்டு வந்தது. பி.ஆர்.பந்துலுவிடம் உதவி இயக்குநராகவும், அவரது ஓட்டுநராகவும் பணியாற்றத் தொடங்கியதும் படங்களுடனான இவரது தொடர்பு தொடங்கியது. உதவி இயக்குநராக இவரது முதல் படம் ரத்னகிரி ரஹஸ்யா (1957) என்பதாகும்.
புட்டன்னா மிக இளம் வயதிலேயே நாகலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் இருந்தன. இருப்பினும் இவர் 1970 களில் தனது ஆதரவாளரும், ஒரு முன்னணி நடிகையுமான ஆரத்தி என்பவரை காதலித்தார். இவர்கள் 1976-77 காலப்பகுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யஷஸ்வினி, என்ற ஒரு மகள் 1978 இல் பிறந்தார். இருப்பினும் படைப்பு வேறுபாடுகள் காரணமாக புட்டன்னாவும் ஆரத்தியும் 1981 இல் பிரிந்தனர்.
1981 ஆம் ஆண்டில் புட்டன்னாவின் மகத்தான திரைப்படமான ரங்கநாயகி திரைப்பட அரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டவில்லை. இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றிருந்தாலும் பின்னர் ஒரு வழிபாட்டு உன்னதமானதாக மாறியது. இது தவிர, ஆரத்தியிடமிருந்து பிரிந்தது இவரது ஆரோக்கியத்தை பாதித்தது. 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1982 நடுப்பகுதி வரை 14 மாதங்கள் இவரிடம் எந்த வேலையும் இல்லை. புட்டன்னா இயக்கிய 'சுபமங்களா' மற்றும் 'தர்மசரே' போன்ற வெற்றி பெற்ற படங்களில் நடித்த ஸ்ரீநாத் இவருக்கு உதவ வந்தார். மேலும் அவர்கள் 'மனாசரோவரா' என்றத் திரைப்படத்தை உருவாக்கினர். இது சராசரி வெற்றியாக மாறியது. ஆனால், புட்டண்ணா மீண்டும் முன்னேற உதவியது. இவரது பிற்கால படங்களான 'அம்ருதா கலீஜ்' மற்றும் 'ரணமுக்தலு' ஆகியத் திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெற்றது.
ஒரு விளம்பரப் பையனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கனகல், நாடகத்துறையில் பணியாற்றிய பின்னர் சுயாதீன திரைப்படத் தயாரிப்பில் ஈர்க்கப்பட்டார். மேலும், திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலுவுடன் அவரது உதவியாளராக பணிபுரிந்தார்.[4] கனகலின் உதவியாளர்களில் தமிழ் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், பாரதிராஜா,[5][6] மற்றும் டி.எஸ்.நாகாபரனா ஆகியோர் அடங்குவர் .[7]
கனகலின் பெரும்பான்மையான திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட கருத்துகளில் இருந்தன. பொதுவாக பெண்களை மையமாகக் கொண்டவை.[4] கலை மற்றும் வணிகத் திரைபடங்களுக்கு இடையில் "பாலமான படங்களை" உருவாக்கும் விமர்சகர்களுக்கும் சாதாரண திரைப்பட பார்வையாளர்களுக்கும் இவர் தன்னை நேசித்தார். எம். கே. இந்திராவின் அதே பெயரில் ஒரு புதினத்தை அடிப்படையாகக் கொண்ட கன்னடத்தில் வெளியான 'கெஜ்ஜே பூஜே' என்ற இவரது படம் ஒரு மைல்கல் படமாக கருதப்படுகிறது.[8] இவரது, 'கப்பு பிலூப்பு '(1969), 'ஷரபஞ்சாரா' (1971), 'நாகரஹாவ் '(1972), 'எடகல்லு குடடா மேலே' (1973), 'சுபமங்கலா' (1975) மற்றும் 'ரங்கநாயகி '(1981), போன்றவை அனைத்தும் கன்னட சினிமாவில் மைல்கற்களாகக் காணப்படுகின்றன.[9] மலையாளம், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரு சில படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
இயக்குநராக
தொகுஇவர் தனது காலத்த்தில் ஒரு திரைப்பட இயக்குநராக பெரும் பெருமையைப் பெற்றார். இவரது முதல் இயக்குனர் முயற்சி 1964இல் வெளியான ஸ்கூல் மாஸ்டர் என்ற மலையாள திரைப்படமாகும். இது தனது வழிகாட்டியான பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் கன்னடத்தில் அதே பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. பின்னர் திரிவேணி என்பவர் எழுதிய கன்னட புதினமான 'பூச்சக்கண்ணி' என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு மலையாள திரைப்படமான பூச்சக்கன்னி (பூனை கண் பெண்) என்பதை இயக்கியுள்ளார் . 1967 ஆம் ஆண்டில் புட்டண்ணாவின் முதல் கன்னட படம் பெல்லிமோடா . கல்பனா மற்றும் கல்யாண் குமார் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. பிரத்தியேகமாக வெளிப்புறத்தில் படமாக்கப்பட்ட முதல் கன்னட திரைப்படமாக பெல்லி மோடா புகழ் பெற்றது. கெஜ்ஜே பூஜே, ஷரபஞ்சாரா, நாகரஹாவ் போன்ற பல தலைசிறந்த படைப்புகளையும் இயக்கியுள்ளார். இவரது கடைசி படமான சவிரா மெட்டிலு, இது இவரது வாழ்நாளில் வெளியிடப்படவில்லை.
மேலும், இவர் கல்பனா, ஆரத்தி, லீலாவதி, ஜெயந்தி, பத்ம வசந்தி, ஸ்ரீநாத், ரசினிகாந்த், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஜெய் ஜகதீஷ், சந்திர சேகர், கங்காதர், சிவராம், வஜ்ரமுனி, ஸ்ரீதர், ராமகிருஷ்ணா மற்றும் அபர்ணா போன்ற ப நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த பல தளங்களை ஏற்படுத்தித் தந்தார்.
கன்னட திரைத்துறையில் உள்ள பெரும்பாலான நடிகர்களை புட்டன்னா அறிமுகப்படுத்தினார். இவரிடம் தமிழ் இயக்குனர் பாரதிராஜா பணியாற்றினார். கனகலின் 24 கன்னட திரைப்படங்கள் ஒவ்வொன்றும் முன்னோடியில்லாத திசையில் நிரப்பப்பட்ட வலுவான கருப்பொருள்களைக் கொண்டிருந்தன.
புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், 2010 தாதாசாகேப் பால்கே விருதை வென்ற புட்டண்ணா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பல நேர்காணல்களில், கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனரான புட்டண்ணா கனகலை, திரைப்பட இயக்கத்தில் தனது குருவாக கருதுவதாக பாலச்சந்தர் கூறியுள்ளார். கனகல் 1985 சூன் 5 அன்று பெங்களூருவில் ஒரு படப்பிடிப்பில் இறந்தார்.
இறப்பு
தொகுகனகல் 1985 சூன் 5 அன்று பெங்களூருவில் ஒரு படப்பிடிப்பில் இறந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகுகனகல் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மூன்று தென்னிந்திய பில்ம்பேர் விருதுகள் மற்றும் பல கர்நாடக மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். கர்நாடக மாநில விருதுகள் விழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவாக புட்டண்ணா கனகல் விருதை வழங்கி கர்நாடக அரசு திரைப்பட இயக்குனர்களையும் பல்வேறு ஆளுமைகளையும் கௌரவிக்கிறது .[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
- ↑ "Seminar on Puttanna Kanagal on July 6". 2 July 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
- ↑ "Mulukanadu personalities". Archived from the original on 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
- ↑ 4.0 4.1 Kaskebar, Asha (2006). Pop Culture India!: Media, Arts, and Lifestyle. ABC-CLIO. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1851096361. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
- ↑ Film World, Volume 14. T. M. Ramachandran. 1978. p. 306. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
- ↑ Baskaran, Sundararaj Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. East West Books (Madras). p. 176. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
- ↑ Cinema in India, Volume 3. Mangala Chandran. 2003. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
- ↑ .
- ↑ "From publicity boy to star director". 4 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2015.
- ↑ The Mysore Economic Review, Volume 73. 1988. p. 56. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.
- ↑ Janata, Volume 41. 1986. p. 80. பார்க்கப்பட்ட நாள் July 11, 2015.