அம்பரீஷ்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

அம்பரீஷ் (Ambareesh, மே 29, 1952 – 24 நவம்பர் 2018),[2]) கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[3] இவர் கர்நாடகாவின், மண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவில் உள்ள தொட்டஅரசினகெரே கிராமத்தில் பிறந்தார். [4] இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

எம். எச். அம்பரீஷ்- ಎಂ.ಹೆಚ್.ಅಂಬರೀಶ್
தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர்
பதவியில்
24 அக்டோபர் 2006 - 15 பெப்ரவரி 2007
பிரதமர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் சௌத்ரி மோகன் ஜதுவா & ஜெகத்ரட்சகன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998 - 2009
முன்னவர் சோ. ம. கிருசுணா
பின்வந்தவர் செலுவராயசாமி
தொகுதி மண்டியா
தனிநபர் தகவல்
பிறப்பு மாளவல்லி ஹஷ்சி கவுடா அமர்நாத்
மே 29, 1952(1952-05-29)
மண்டியா, மைசூர், கருநாடகம்
இறப்பு 24 நவம்பர் 2018(2018-11-24) (அகவை 66)[1]
பெங்களூர், கருநாடகம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சுமலதா
பிள்ளைகள் ஒரு மகன் (அபிஷேக் அம்பரீஷ்)
இருப்பிடம் பெங்களூரு, கருநாடகம்
தொழில் நடிகர்
சமயம் இந்து

இறப்புதொகு

கன்னட நடிகர் அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 24, 2018 அன்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். [5]

திரைப்படங்கள்தொகு

  1. நாகரஹாவு
  2. பங்காரத கள்ள
  3. சீதையல்ல சாவித்ரி
  4. மகதேஸ்வர பூஜாபல
  5. சுபமங்களா
  6. பாக்கியஜோதி
  7. ஒந்தே ரூப எரடு குணா
  8. தேவர கண்ணு
  9. ஹுடுகாடத ஹுடுகி
  10. கதாசங்கமா

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பரீஷ்&oldid=2996053" இருந்து மீள்விக்கப்பட்டது