சலீம் (2014 திரைப்படம்)
சலீம் (Salim) என். வி. நிர்மல் குமார் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும்.[1] விஜய் ஆண்டனி, அக்ஷா, பேரம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர். கே. சுரேஷ், எம். எஸ். சரவணன், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி இசை அமைப்பில், 29 ஆகஸ்ட் 2014 ஆம் தேதி வெளியானது. 2012 ஆம் ஆண்டு வெளியான நான் என்ற படத்தின் இரண்டாம் பாகமாகும்.
நடிகர்கள்
தொகுவிஜய் ஆண்டனி, அக்ஷா, ஆர். என். ஆர். மனோகர், ஸ்வாமிநாதன், அருளதாஸ், சந்திரமௌலி, சுஷ்மிதா, பிரேம்ஜி அமரன், ப்ரியா அஸ்மிதா.
கதைச்சுருக்கம்
தொகுசலீம் ஒரு நியாமான கருணை குணம் கொண்ட மருத்துவர். ஏழ்மையானவர்களிடம் பணம் வாங்க மாட்டார். அவரின் திறைமையைக் கண்டு உடன் பணிபுரிவோர் பொறாமை கொள்கின்றனர். சலீமிற்கும் நிஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதல் செய்கின்றனர். சலீம் மிகவும் வேலையில் கவனம் செலுத்துவதால், நிஷாவுடன் அவ்வளவாக நேரம் செலுத்த முடியாததால் கோபம் கொள்கிறாள் நிஷா.
பணம் வாங்காமல் சிகிச்சை செய்வதை கண்டிக்கார் மருத்துவமனை மேலாளர். அவர் ஏற்பாடு செய்யும் விருந்தில் கலந்துகொண்டு, அது பிடிக்காமல் போக அங்கே சண்டையிட்டு வெளியே வரும் சலீமிற்கு ஒரு காவல் அதிகாரியுடன் மோதல் ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பித்து, ஒரு விடுதிக்கு செல்லும் சலீம், 4 தீயவர்களிடமிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அந்த நான்கு பேர்களில் ஒருவன் மந்திரியின் மகன் என்பதால் பிரச்சனை பெரியதாகிறது. பின்னர், அந்த சூழிநிலைகளை சமாளித்து எவ்வாறு சலீம் தப்பித்தார் என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
தொகுஇந்தத் திரைப்படத்தின் இசையை அமைத்தவர் விஜய் ஆண்டனி ஆவார். அண்ணாமலை, கானா பாலா ஆகியோர் பாடல்களை எழுதினர். ஐந்து பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு, 5 ஜூன் 2014 ஆம் தேதி வெளியானது. பாடல்தொகுப்பிற்கு ஐந்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.[2]
- பிரேயர்
- உன்னை கண்ட நாள் முதல்
- சிவ சம்போ
- மஸ்காரா போட்டு
- உலகம் நீ
வெளியீடு
தொகு29 ஆகஸ்ட் 2014 ஆம் தேதி, இந்திய அளவில் சுமாராக 400 திரைகளில் வெளியிடப்பட்டது. கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ஸ்ரீ ப்ரொடக்க்ஷன்ஸ் இப்படத்தை இந்தியாவில் விநியோகம் செய்தன. சுவரா நெட்ஒர்க்ஸ் வாயிலாக வெளிநாடுகளில் 50 திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டது.
வரவேற்பு
தொகுசிறந்த கதையாக இல்லாவிட்டாலும், விறுவிறுப்பான திரைக்கதையையும், பலத் திருப்பங்களும் நிறைந்த கதை களமும் கொண்ட திரைப்படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.[4]
வெளி-இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "http://articles.timesofindia.indiatimes.com/". Archived from the original on 2013-08-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
{{cite web}}
: External link in
(help); Unknown parameter|title=
|=
ignored (help) - ↑ "http://www.behindwoods.com/".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "https://gaana.com". Archived from the original on 2017-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.newindianexpress.com/".
{{cite web}}
: External link in
(help)|title=