புதிய தலைமுறை (தொலைக்காட்சி)

புதிய தலைமுறை என்பது தமிழ் மொழியில் இயங்கும் எஸ்ஆர்எம் குழுமத்திற்குச் சொந்தமான 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஆகத்து 24, 2011 அன்று சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

புதிய தலைமுறை (தொலைக்காட்சி)
ஒளிபரப்பு தொடக்கம் 24 ஆகத்து 2011
வலையமைப்பு நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிமிட்டட்
கொள்கைக்குரல் 'உண்மை உடனுக்குடன்'
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) புதுயுகம் தொலைக்காட்சி
வலைத்தளம் www.puthiyathalaimurai.tv

நோக்கம் தொகு

நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

நிறுவனம் தொகு

சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் வெளியிடுகிறது.

செய்திக்குழு தொகு

இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது.

அன்றாட நிகழ்ச்சிகள் தொகு

  • புதிய விடியல்
  • புதுப் புது அர்த்தங்கள்
  • வணிகம்
  • ஓடி விளையாடு
  • கற்க கசடற
  • உங்கள் ஊர் உங்கள் குரல்
  • இன்றைய தினம்
  • நேர்படப்பேசு[1]
  • நாளைய நாளிதழ்
  • விரைவு செய்திகள்.

வார நிகழ்ச்சிகள்[2] தொகு

  • அக்னி பரீட்சை
  • ஆயுதம் செய்வோம்

சான்றுகள் தொகு

  1. "Best TV Anchor, Male - Ananda Vikatan Awards 2016 Winners" இம் மூலத்தில் இருந்து 2017-05-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170505110313/http://www.tamilnaducentral.com/2017/01/14/ananda-vikatan-awards-2016-winners/. 
  2. "Best TV Programme - Ananda Vikatan Awards 2015 Winners" இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202035224/http://www.tamilnaducentral.com/2016/01/09/ananda-vikatan-awards-2015-winners/. 

வெளி இணைப்புகள் தொகு