தந்துவிட்டேன் என்னை

ஸ்ரீதர் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தந்துவிட்டேன் என்னை (Thanthu Vitten Ennai) என்பது 1991 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விக்ரம் , ரோகிணி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படமே இயக்குநர் ஸ்ரீதரின் கடைசிப் படமாகும்.[1][2]

தந்துவிட்டேன் என்னை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம்
ரோகிணி
மனோரமா
பாரதிராஜா
ஒளிப்பதிவுசிவா
படத்தொகுப்புசந்திரன்
கலையகம்சித்ராலயா
விநியோகம்சித்ராலயா
வெளியீடு21 சூன் 1991
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

ஒரு பணக்காரப் பெண்ணும் ஒரு சதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகனும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது சொத்து சுகத்தையெல்லாம் விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். ஆனால் நாயகன், தனக்கு வேலை இல்லாத காரணத்தால், அவளைப் பத்திரமாக அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிடுகிறார். நாயகனின் இந்த நேர்மையால் கவரப்பட்ட அவர், நாயகனுக்கு வேலை தேடிக்கொள்ள ஓர் ஆண்டு அவகாசம் தருகிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா என்பதே முடிவு.

இசை தொகு

இப்படத்துக்காக இளையராஜா ஆறு பாடல்களுக்கு இசையமைத்தார். பாடல்வரிகளை இளையராஜா, புலமைப்பித்தன், கங்கை அமரன் மு. மேத்தா ஆகியோர் எழுதினர்.[3]

பாடல் பாடகர் நீளம்

(நி:வி)
"கண்களுக்குள்" எஸ். ஜானகி 4:37
"மன்னவனே" எஸ் ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:36
"முத்தமா" அருண்மொழி, உமா ரமணன் 4:47
"தென்றல் நீ" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:26
"மனசுலோனி" எஸ். ஜானகி 5:50
"ஆத்தாடி அள்ளிக்கோடி" 4:34

வரவேற்பு தொகு

இப்படம் குறித்து சித்ராலயா கோபு குறிப்பிடும்போது, இது ஒரு தோல்விப்படம் என்றும், ஒரு வாரம்கூட திரையரங்குகளில் ஓடவில்லை எனக் குறிப்பிட்டார். இதற்காண காரணத்தை அவர் ஆராய்ந்தபோது. தன்னை நம்பிவந்த நாயகியை கதாநாயகன் திருமணம் செய்துகொண்டு அவளை எப்பாடுபட்டாவது வைத்துக் காப்பாறாறாமல் அவளது தந்தையிடம் கொண்டுவந்து ஒப்படைத்ததை இரசிகர்கள் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019-563579-5. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  2. Rangan, Baradwaj. Man of Steel – How suffering turned a college lad into a Tamil superstar. http://www.caravanmagazine.in/arts/man-steel. 
  3. http://play.raaga.com/tamil/album/Thanthu-Vitten-Ennai-songs-T0000774
  4. டி.ஏ.நரசிம்மன் (11 சனவரி 2019). "தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்துவிட்டேன்_என்னை&oldid=3660155" இலிருந்து மீள்விக்கப்பட்டது