படைவீரன் (Padaiveeran) தனா இயக்கத்தில், மதிவாணனின் தயாரிப்பில், விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அகில், அம்ரிதா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் கார்த்திக் ராஜாவின் இசையில், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவில், புவன் சீனிவாசனின் படத்தொகுப்பில் பிப்ரவரி 2018இல் திரையரங்குகளில் வெளியானது.

படைவீரன்
இயக்கம்தனா
தயாரிப்புமதிவாணன்
கதைதனா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புவிஜய் யேசுதாஸ்
பாரதிராஜா
அகில்
அம்ரிதா
ஒளிப்பதிவுராஜவேல் மோகன்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
வெளியீடு2 பிப்ரவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

தேனி வட்டாரத்தில் இரு சாதிப்பிரிவுகளைச்சார்ந்த மக்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளும், பிணக்குகளும் உண்டாவதும், அதனால் உயிர்கள் பலியாவதும் இயல்பான ஒன்றாக நிகழ்ந்து வருகிறது.[1] இச்சூழலில் தேனிப்பகுதியில் வேலையில்லாமல் ஊர் சுற்றி வரும் முனீசுவரன் (விஜய் யேசுதாஸ்), காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தால் நிறைய ஊதியம் கிடைக்கும் என்னும் ஆசையில் ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரரும், தனது பெரியப்பாவுமான பாரதிராஜா பரிந்துரையில் காவல் துறையில் பணிக்குச் சேருகின்றார். காவல் துறைப்பயிற்சி முடிந்து விஜய் யேசுதால் தனது ஊருக்கு திரும்ப இருக்கும் சூழலில், தனது சொந்தப்பகுதியான தேனியில் அந்த இரண்டு சாதி பிரிவினருக்கும் முரண்பாடுகள் வலுத்து கலவரம் ஏற்படுகிறது. ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்காக புறப்பட்ட காவலர் குழுவில் முனீசுவரன் உள்ளார். சாதிக்கலவரத்தை அடக்க ஏற்படும் முயற்சியில் பல திடுக்கிடும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. அந்த நிகழ்வுகள் என்னென்ன? முனீசுவரன் அந்த சாதிக்கலவரத்தை அடக்கினாரா? என்பதை விளக்குகின்றது படைவீரனின் கதைப்பின்னல்.[2][3]

இப்படத்தில் எட்டு பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் கார்த்திக் ராஜா [4] மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பாடல்களை தனா, பிரியன், மோன்ராஜன்ஆகியோர் எழுதியுள்ளனர்.

திரைப்படப்பணிகள்

தொகு

ஏப்பிரல் 2016இல் இத்திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் தனா அறிவித்து, விஜய் யேசுதாஸ், பாரதிராஜா- இப்படத்தில் முன்னணி கதைப்பாத்திரங்களில் தோன்ற உள்ளதாக தெரிவித்தார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படம், 2018இல் திரையரங்குகளில் வெளியானது.[5]

சான்றுகள்

தொகு
  1. http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/padai-veeran-movie-review-118020200005_1.html
  2. https://top10cinema.com/article/tl/45729/padaiveeran-movie-review[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://cinema.dinamalar.com/movie-review/2285/Padaiveeran/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-08. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
  5. tamiltalk. "Bharathiraja vs Vijay Yesudas on cards - KOLLY TALK". kollytalk.com. Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=படைவீரன்&oldid=4113587" இலிருந்து மீள்விக்கப்பட்டது