கொக்கி என்பது ஒரு முனையில் அரை வட்ட வடிவில் வளைந்தும் மறு முனை நீண்டும் காணப்படும் ஒரு கருவியாகும். இது மற்றொரு பொருளைப் பிடிக்க, தாழ்ப்பாள் போல அல்லது எந்த வகையிலும் தன்னை இணைக்கவும் மீன் பிடித்தல் தொழிலிலும் பயன்படுகிறது.சில பொருள்களை இலகுவாக கையில் எடுப்பதற்கு முடிகளுடனும், அதன் தொலைதூர முனை, கூர்மையாகவும் அமைந்துள்ளன.

கப்பல் நங்கூரம்
நங்கூரம்
பழங்கால தொப்பி கொக்கி
தொப்பி
கொக்கி குறி
கேள்விக்குறி
ஒரு மர வாயிலுக்கு தாழ்ப்பாளாக பயன்படுத்தப்படும் ஒரு அறை கொக்கி

கொக்கியின் வகைகள்

தொகு
  • தானியங்களை அறுவடை செய்யப் பயன்படும் கொக்கி, பெரிய அரிவாள் அல்லது அறுவடைக் கொக்கி[1][2]
  • பாலியல் விபரீத விளையாட்டில் பயன்படுத்தப்படும் இணைப்புக் கொக்கி
  • நிலைக்கால் கொக்கி, கதவுகளில் பயன்படுத்தப்படும் கண் திருகாணியில் ஈடுபடும் ஒரு கொக்கி பட்டை[3][4]
  • தொப்பி கொக்கி, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளின் தொப்பிகளில் அணியப்படும் ஆபரணம்[5]
  • சரக்கு கொக்கி, வானூர்திகளில் சரக்குகளைக் கையாளப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கொக்கி அமைப்புகள்
  • கைவேலைக் கொக்கி, நூல் கோற்க்க அல்லது நூலை குத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது
  • திரைச்சீலை கொக்கி, தொங்கும் திரைச்சீலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது
  • ஆடை கொக்கி, ஆடைகளை இணைக்க துணைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது
  • காது கொக்கி, காதணிகளை இணைக்க பயன்படுத்தப்படுகிறது
  • மீன் தூண்டில், மீன் பிடிக்க பயன்படுகிறது
  • இறைச்சிகளை சமைக்கப் பயன்படும் மாமிசக் கொக்கி இதன் மற்றோரு வகை கொக்கியானது, இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சித் தொழிலில் விலங்குகளின் இறைச்சிகளைத் தொங்கவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது
  • மலையேற்ற கொக்கி, ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு கொக்கி, ஒரு இலக்கை எறிந்து சிக்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கொக்கி மற்றும் சங்கிலி இணைப்பான், ரயில்வே வாகனங்களுக்கான இணைப்புக்கான இயந்திர பகுதி கொக்கி (கை கருவி), லாங்ஷோர்மேனின் கொக்கி மற்றும் பேல் ஹூக் என்றும் அழைக்கப்படுகிறது, இது சுமைகளைப் பாதுகாப்பதற்கும் நகர்த்துவதற்கும் பயன்படுத்தப்படும் கருவி[6]
  • செயற்கை உடலுறுப்புக் கொக்கி - செயற்கை உறுப்புகளை இணைக்க பயன்படும் கொக்கி
  • தூக்கு கொக்கி - சுமைகளைப் பிடிப்பதற்கும் தூக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது
  • ரயிலை நிறுத்தாமல் தபால் பைகளை எடுக்க மெயில் ஹூக்
  • ஆடு மேய்ப்பனின் கொக்கி, ஆடு அல்லது பிற விலங்குகளை மேய்க்கும் போது, அவைகளுக்கு இரை பறிக்கவும், பிற விலங்குகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு கோல்
  • முற்றுகை கொக்கி, முற்றுகையின் போது சுவரில் இருந்து கற்களை இழுக்க பயன்படுத்தப்படும் பண்டைய ரோமானிய ஆயுதம்
  • மைய நங்கூரக் கொக்கி [7] மூலம் பல கொக்கிகள் பொருத்தி பரந்த பரப்பில் பயன்படுத்தும் வகையில் உள்ளன. கொக்கிகளில் மேலும் ஒரு மேற்பரப்பு பகுதியாக அழுத்தமாக பிடிக்கவும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் வடிவமைக்கபட்டுள்ளது

மேற்கோள்கள்

தொகு
  1. Unger-Hamilton, Romana (July 1985). "Microscopic Striations on Flint Sickle-Blades as an Indication of Plant Cultivation: Preliminary Results". World Archaeology 17 (1): 121–6. doi:10.1080/00438243.1985.9979955. 
  2. Banning, E.B. (1998). "The Neolithic Period: Triumphs of Architecture, Agriculture, and Art". Near Eastern Archaeology 61 (4): 188–237. doi:10.2307/3210656. https://archive.org/details/sim_near-eastern-archaeology_1998-12_61_4/page/188. 
  3. Beazley, Elisabeth (1990). Beazley's Design and Detail of the Space Between Buildings. Taylor & Francis. pp. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-419-13620-0.
  4. Porter, Brian; Christopher Tooke (2007). Carpentry and Joinery 3. Butterworth-Heinemann. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-6505-6.
  5. Gaimster, David; Hayward, Maria; Mitchell, David; Parker, Karen (2002). "Tudor Silver-Gilt Dress-hooks: A New Class of Treasure Find in England". The Antiquaries Journal. 82: 157–196. ISSN 0003-5815. doi:10.1017/S0003581500073777. ^ Jump up to: a b c British Museum. "Cap hook". Retrieved 2 February 2017. Jump up ^ Leeds Museums and Galleries. "Cap hook". Retrieved 2 February 2017
  6. EN 15566-2009+A1:2010 Railway applications – Railway rolling stock – Draw gear and screw coupling
  7. "How to Choose the Right Boat Anchor Types - Active Fisherman". Active Fisherman. 2 January 2015. Retrieved 18 May 2016. Jump up ^ us patent 1974933, G. I. Taylor, "Anchor", issued 1934-09-25 Jump up ^ Taylor, G. I. (1974). "The history of an invention". Bulletin of the Institute of Mathematics and its Applications. 10: 367–368. Cited by Batchelor, G. K. (1986). "Geoffrey Ingram Taylor, 7 March 1886–27 June 1975". Journal of Fluid Mechanics. 173: 1–14. doi:10.1017/S0022112086001040.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கி&oldid=3896299" இலிருந்து மீள்விக்கப்பட்டது