முதன்மை பட்டியைத் திறக்கவும்

இயக்குநர் (திரைப்படம்)

ஒரு திரைப்படத்தினை இயக்குபவர்
(இயக்குனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரைப்பட இயக்குநர், அல்லது இயக்குநர் என்பவர் ஓர் திரைப்படம் உருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர்.

ஓர் இயக்குநர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தித் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது. ஓர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்வார். இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர் இயக்குநரை கட்டுப்படுத்தும் போக்குக் காணப்படலாம்.

ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரின் தனிக்காட்சியை இயக்கும்போது இயக்குநரின் பங்கு ஓரளவு குறைந்திருக்கும். நிகழ்ச்சித் தயாரிப்பாளரே தொடரின் காட்சியமைப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் பார்வையாளர் பின்னூட்டத்திற்கொப்ப வரையறுத்திருப்பார்.[1]

மேற்கோள்கள்தொகு