செல்வம் (1966 திரைப்படம்)

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

செல்வம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

செல்வம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புவி. கே. ராமசாமி
வி. கே. ஆர். பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்.
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 11, 1966
நீளம்4232 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோசம் உள்ளது. அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அவன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் சோதிடர்கள். நாயகன் தன் மனதுக்கு உகந்த மாமன் பெண்ணைக் திருமணம் செய்ய விரும்புகிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறாள். இந்நிலையில் சோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன். மாங்கல்ய தோஷத்தை மீறித் திருமணம் செய்ததால் ஒரு பரிகாரமாக ஓராண்டுக்கு கணவன் மனைவி என இருவரையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் சோதிடர்கள். ஆனால், இருவரும் இளமை வேகத்தில் அதை மீறிவிடுகின்றனர். அதன்பிறகு என்ன ஆனது சோதிடம் பலித்ததா, இல்லையா என்பதையும், சோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், சோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் படத்தில் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (11 November 2022). "கடன் சுமையில் இருந்த வி.கே.ராமசாமிக்கு சிவாஜி கொடுத்த 'செல்வம்'!". Kamadenu. Archived from the original on 14 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.
  2. "101-110". nadigarthilagam.com. Archived from the original on 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  3. "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 156 – சுதாங்கன் - தினமலர்". தினமலர். Nellai. 18 December 2016. Archived from the original on 14 September 2021. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வம்_(1966_திரைப்படம்)&oldid=4124065" இலிருந்து மீள்விக்கப்பட்டது