சாமிக்கண்ணு

தமிழ்த் திரைப்பட நடிகர்

சாமிக்கண்ணு என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு புதுயுகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.[1] இவர் அன்னக்கிளி, வண்டிச் சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரி ராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகா பிரபு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

சாமிக்கண்ணு
பிறப்புசாமிக்கண்ணு
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி
பிள்ளைகள்
  • அம்பிகா
  • ராஜேஸ்வரி
  • விவேகானந்தன்
  • தயானந்தன்

வாழ்க்கை

தொகு

சாமிக்கண்ணு 8 வயதில் நாடக குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[1]சாமிக்கண்ணு விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்‌. இத்தம்பதிகளுக்கு விவேகானந்தன், தயானந்தன் என இரு மகன்களும், அம்பிகா, ராஜேஸ்வரி என இரு மகள்களும் உள்ளனர்.[2]

மறைவு

தொகு

சாமிக்கண்ணு சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவந்தார். [3] இவர் ஜூன் 3, 2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.[4]

திரைப்படத்துறை

தொகு

இத்திரைப்படங்களின் பட்டியல் முழுமையானதல்ல. விரிவாக்கம் செய்யப்படலாம்.

1950களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1954 புதுயுகம் அறிமுக திரைப்படம்

1960களில்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1961 சபாஷ் மாப்பிள்ளை
1964 கர்ணன்
1965 பூஜைக்கு வந்த மலர் துணிகடை முதலாளி
1966 சித்தி (திரைப்படம்) திருமண தரகர்
1966 கொடிமலர்
1966 செல்வம்
1966 சின்னஞ்சிறு உலகம்
1967 பேசும் தெய்வம்
1967 பாமா விஜயம்
1967 அனுபவி ராஜா அனுபவி
1967 நான்
1967 பெண்ணேநீவாழ்க
1968 பணமா பாசமா
1968 ஜீவனாம்சம்
1968 எங்க ஊர் ராஜா
1969 குலவிளக்கு
1969 சுபதினம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1970 மாலதி
1971 சவாலே சமாளி
1971 மீண்டும் வாழ்வேன் காண்ஸ்டபில் இதயராஜா
1972 நவாப் நாற்காலி
1972 குறத்தி மகன்
1972 என்ன முதலாளி சௌக்கியமா
1972 பட்டிக்காடா பட்டணமா
1973 ராஜபார்ட் ரங்கதுரை
1973 பொண்ணுக்கு தங்க மனசு
1974 உரிமைக்குரல்
1975 மனிதனும் தெய்வமாகலாம்
1975 பிஞ்சு மனம்
1975 கஸ்தூரி விஜயம்
1975 ஆயிரத்தில் ஒருத்தி
1975 பாட்டும் பரதமும்
1976 அன்னக்கிளி
1976 பாலூட்டி வளர்த்த கிளி
1976 உங்களில் ஒருத்தி
1977 பட்டினப்பிரவேசம்
1977 இன்றுபோல் என்றும் வாழ்க
1977 கவிக்குயில்
1977 பாலாபிஷேகம்
1978 சங்கர் சலீம் சைமன்
1978 முள்ளும் மலரும் பயபுள்ள
1978 ஸ்ரீ காஞ்சி காமாட்சி
1978 என் கேள்விக்கு என்ன பதில்
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி
1979 உதிரிப்பூக்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1980 நீர் நிலம் நெருப்பு
1980 பூட்டாத பூட்டுகள்
1980 ஜானி
1980 வண்டிச்சக்கரம்
1981 நண்டு
1981 சிவப்பு மல்லி
1981 சுமை
1981 குடும்பம் ஒரு கதம்பம்
1982 போக்கிரி ராஜா
1982 மெட்டி
1982 எச்சில் இரவுகள்
1982 ஹிட்லர் உமாநாத்
1982 அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை
1982 சகலகலா வல்லவன்
1983 தூரம் அதிகமில்லை
1983 புத்திசாலிப் பைத்தியங்கள்
1985 கரையைத் தொடாத அலைகள்
1987 சின்னக்குயில் பாடுது
1988 மனசுக்குள் மத்தாப்பூ
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1990 வரவு நல்ல உறவு
1990 நானும் இந்த ஊர்தான்
1990 வேடிக்கை என் வாடிக்கை
1990 மதுரை வீரன் எங்க சாமி
1991 நாடு அதை நாடு
1991 என் ராசாவின் மனசிலே தங்கமுத்து
1993 முற்றுகை
1996 வைகறை பூக்கள் இறுதிப்படம்

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Maalaimalar cinema :Actor samikannu dies". cinema.maalaimalar.com.
  2. "நடிகர் சாமிக்கண்ணு மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்!". Puthiyathalaimurai.
  3. ’ஜானி’ புகழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் சென்னையில் நல்லடக்கம்! - அஸ்வினி.சி - ஜூன் 4,2017 - விகடன்
  4. ’ஜானி’ புகழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் சென்னையில் நல்லடக்கம்! - அஸ்வினி.சி- ஜூன் 4,2017 - விகடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமிக்கண்ணு&oldid=4093796" இலிருந்து மீள்விக்கப்பட்டது