வாகா

இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லை

வாகா (Wagah, பஞ்சாபி: ਵਾਹਗਾ, இந்தி: वाघा) இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.[1] இது பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்திற்கும், பாக்கித்தானிய பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர்கள் (20 mi) தொலைவிலும் இலாகூரிலிருந்து 22 கிலோமீட்டர்கள் (14 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

வாகா
واہگہ
Union Council
Wahga
வாகா எல்லையில் இந்தியா-பாக்கித்தான் இராணுவத்தினரின் மாலைநேர கொடியிறக்குச் சடங்கு
வாகா எல்லையில் இந்தியா-பாக்கித்தான் இராணுவத்தினரின் மாலைநேர கொடியிறக்குச் சடங்கு
வாகாவின் இடம்
வாகாவின் இடம்
வாகா is located in பாக்கித்தான்
வாகா
வாகா
பாக்கித்தான் வரைபடத்தில் உள்ள வாகா நகரம்.
ஆள்கூறுகள்: 31°36′17″N 74°34′23″E / 31.60472°N 74.57306°E / 31.60472; 74.57306
Countryபாக்கித்தான்
Provinceபஞ்சாப்
மாவட்டம்லாகூர்
Union Council181
நேர வலயம்பாசீநே (ஒசநே+5)

மேலோட்டம் தொகு

 
சுமை தொழிலாளிகள் சரக்குகளுடன் வாகா எல்லையைக் கடக்கும் காட்சி

வாகா, (பாக்கித்தானில் வாகஹ் என்றழைக்கப்படுகிறது) இந்தியப் பிரிவினையின்போது இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கப் போடப்பட்ட சர்ச்சைக்குரிய ராட்கிளிஃப் கோடு செல்கின்ற சிற்றூர் ஆகும்.[2] 1947இல் இந்தச் சிற்றூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது கிழக்குப் பகுதியிலுள்ள வாகா கிராமம், இந்தியக் குடியரசிலும் மேற்கு வாகா கிராமம் பாக்கித்தானிலும் உள்ளது.

ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நடைபெறும் விரிவான வாகா எல்லைச் சடங்குக்காக இச் சிற்றூர் புகழ் பெற்றது.[2]

2014 தற்கொலைத் தாக்குதல் தொகு

நவம்பர் 2, 2014 அன்று வாகா எல்லைப்பகுதியின் பாக்கித்தான் புறத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றால் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்; 110க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர். மாலையில் வாகா எல்லைச் சடங்கு முடிந்த பின்னர் குண்டு வெடித்தது.[3] பாக்கித்தானின் ஜுன்டால்லா என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு இந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதே அமைப்பு முந்தைய செப்டம்பரில் பெஷாவர் நகரில் கிறித்தவ தேவாலயமொன்றில் நிகழ்த்திய தாக்குதலில் 78 கிறித்தவர்கள் மாண்டனர்.

மேற்சான்றுகள் தொகு

  1. "Mixed feelings on India-Pakistan border". BBC News. 14 August 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6945626.stm. 
  2. 2.0 2.1 Frank Jacobs (3 July 2012). "Peacocks at Sunset". Opinionator: Borderlines. The New York Times. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  3. "Pakistan blast 'kills 60' at Wagah border with India". DAWN News. 2 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wagah Border
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகா&oldid=3228152" இலிருந்து மீள்விக்கப்பட்டது