அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த் (Anbulla Rajinikanth) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா, மீனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

அன்புள்ள ரஜினிகாந்த்
இயக்கம்கே. நடராஜ்
தயாரிப்புஎம். எஸ். அக்பர் தூயவன்
தமிழ் மணி
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
அம்பிகா
வை. ஜீ. மகேந்திரன்
ராஜ்குமார்
கே. பாக்யராஜ்(கெளரவ வேடம்)
விநியோகம்எஸ். டி. கம்பைன்ஸ்
வெளியீடுஆகத்து 2, 1984
நீளம்3995 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள்

தொகு

* தயாரிப்பு தூயவன். இவர் தேவர் பிலிம்ஸில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றியவர். ரங்கா, அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

  • இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "முத்து" போன்ற படங்களில் நடித்தார்.
  • இத்திரைப்படத்தை இயக்கியவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன். இவரே "மூன்று முடிச்சு" படத்தில் மனச்சாட்சியாக நடித்தவர்.
  • இத்திரைப்படத்தில் லதா ரஜனிகாந்த், "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே" என்ற பாடலுக்கு பின்னணி பாடியுள்ளார்.
  • இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி நடிகரும்கூட. இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் சாமியாராக நடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Anbulla Rajinikanth". The Star (Malaysia). 28 June 2015 இம் மூலத்தில் இருந்து 5 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170905231235/https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20150628/281840052318771. 
  2. Kumar, S. R. Ashok (18 October 2013). "Shotcuts: Red is ready". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140227081612/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shotcuts-red-is-ready/article5247768.ece. 
  3. "Anbulla Rajnikanth (1984)". Raaga.com. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புள்ள_ரஜினிகாந்த்&oldid=4135000" இலிருந்து மீள்விக்கப்பட்டது