தூயவன்

தமிழ் எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர்

தூயவன் (Thooyavan இறப்பு: 11. சூலை. 1987 ) என்பவர் ( இயற்பெயர் எம். எஸ். அக்பர் ) என்பவர் தமிழ் எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

எழுத்துப் பணிகள்

தொகு

இவர் தமிழ்நாட்டின் நாகூரைச் சேர்ந்தவர். இவரது முதல் நிறுகதையான பூஜைக்கு வந்த மலர் என்ற சிறுகதை முத்திரை கதையாக ஆனந்தவிகடனில் 1967இல் வெளிவந்தது. தினமணி கதிர் வார இதழில் இவர் எழுதிய சிவப்பு ரோஜா என்ற சிறுகதை பரிசுக்கதையாகத் தேர்ந்தெடுக்கபட்டு வெளியானது. நடிகர் மேஜர் சுந்தராஜனின் நாடகக் குழுவுக்காக தீர்ப்பு என்ற நாடகத்தை எழுதினார். மேலும் ஏ. வி. எம். ராஜனின் நடகக் குழவுக்காக பால் குடம் என்ற நாடகத்தை எழுதினார்.

திரைப்படத் துறையில்

தொகு

இவர் கிட்டத்தட்ட 84 திரைப்படங்களுக்கு திரைக்கதை, உரையாடலை எழுதியிருக்கிறார். ஏழு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் 12 ஆகும்.

விருதுகள்

தொகு

1978இல் பலப்பரிட்சை என்ற திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

குடும்பம்

தொகு

இவரது மனைவி கே.ஜெய்புன்னிசா என்பவராவார் இவர் செல்வி என்ற பெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர்களுக்கு 27, செப்டம்பர். 1968 இல் திருமணம் நடந்தது.[1] இந்த இணையருக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் என இரு பிள்ளைகளாவர். பாபு தூயவன் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக உள்ளார்.[2]

தயாரித்த திரைப்படங்கள்

தொகு

வசனம் எழுதிய திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூயவன்&oldid=4087881" இலிருந்து மீள்விக்கப்பட்டது