வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு பாகம் I, (Vendhu Thanindhathu Kaadu) 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.[1] இத்திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்சு பிலிம் இன்டர்நேசனல் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் செயன்ட் மூவிசின் மூலம் வெளியிட்டார். மும்பையைச் சேர்ந்த சித்தார்த்து நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]

வெந்து தணிந்தது காடு
பாகம் I: பற்றவைத்தல்
(The Kindling)
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்புஐசரி கணேஷ்
திரைக்கதைகௌதம் வாசுதேவ் மேனன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசிலம்பரசன்
சித்தி இட்னானி
ஒளிப்பதிவுசித்தார்த்தா நுனி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்வேல்ஸ் பிலிம் இன்டர்நேசனல்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 2022 (2022-09-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹12 கோடி (முதல் நாள் வசூல்)

நடிகர்கள்

தொகு

திரை இசை

தொகு

இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இது, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வரிசையில் கெளதம் மேனன் - ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும்.

பாடல்கள்

தொகு

இப்படத்தின் பாடல் உரிமையை திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றது.[5] இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2, 2022 அன்று நடைபெற்றது.[6]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் தாமரை

# பாடல்பாடகர்கள் நீளம்
1. "காலத்துக்கும் நீ வேணும்"  சிலம்பரசன், ரக்‌ஷிதா சுரேஷ் 4:54
2. "முத்துவின் பயணம்"  ஏ. ஆர். ரகுமான் 1:22
3. "மறக்குமா நெஞ்சம்"  ஏ. ஆர். ரகுமான் 4:18
4. "உன்ன நெனச்சதும்"  சிரேயா கோசல், சர்தக் கல்யாணி 3:56
5. "மல்லிப்பூ"  மதுஸ்ரீ 4:05

மேற்கோள்கள்

தொகு
  1. "வெந்து தணிந்தது காடு: சினிமா விமர்சனம்", BBC News தமிழ், 2022-09-15, பார்க்கப்பட்ட நாள் 2024-06-15
  2. "வெந்து தணிந்தது காடு : சினிமா விமர்சனம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Cinema/Review/venthu-thaninthathu-kadu-movie-review-794363. பார்த்த நாள்: 15 June 2024. 
  3. "Radikaa Sarathkumar plays Simbu's mother in Gautham Menon's Vendhu Thanindhathu Kaadu", The Times of India, 2021-08-09, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257, பார்க்கப்பட்ட நாள் 2024-06-15
  4. "வெந்து தணிந்தது காடு: திரை விமர்சனம்", Hindu Tamil Thisai, 2022-09-17, பார்க்கப்பட்ட நாள் 2024-06-15
  5. "Vendhu Thanindhathu Kaadu shooting resumes! Audio rights bagged!", www.moviecrow.com, பார்க்கப்பட்ட நாள் 2024-06-15
  6. "வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா..கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு!". பிலிம் பீட்டு. https://tamil.filmibeat.com/news/producer-ishari-k-ganesh-met-ulaganayagan-kamal-haasan-and-invited-him-for-vendhu-thanindhathu-kaadu-099800.html. பார்த்த நாள்: 15 June 2024. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்து_தணிந்தது_காடு&oldid=4161088" இலிருந்து மீள்விக்கப்பட்டது