ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் (திரைப்படம்)
ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம்(Sri Ramakrishna Darshanam) என்பது 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இத்திரைப்படமானது வங்காளத்தைச் சேர்ந்த துறவியான இராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதனை இயக்கியவர் ஜி. என். தாஸ், தயாரிப்பாளர் ஜி. என். டி. விசன் இன்டர்நேசனல் பிரைவேட் லிமிடெட் ஆகும். இத்திரைப்படம் சென்னையில் ஆகத்து 17 அன்று சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது.[1][2]
ஸ்ரீராம கிருஷ்ண தரிசனம் | |
---|---|
இயக்கம் | ஜி. என். தாஸ் |
தயாரிப்பு | ஜி. என். தாஸ் |
நடிப்பு | சசிகுமார் சுப்ரமணி டெல்லி கணேஷ் ரவிந்திரநாத் சுராஜ் லட்சுமி உமா |
கலையகம் | ஜி. என். டி. விசன் இன்டர்நேசனல் பிரைவேட் லிமிடெட் |
வெளியீடு | 2012 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா, சிங்கப்பூர் |
மொழி | தமிழ், இந்தி |
கதை
தொகுஇத்திரைப்படம் இராமகிருஷ்ணரின் முழு வாழ்க்கையையும் ஆவணமாக்க முற்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஹூக்லியில் இராமகிருஷ்ணர் பிறந்ததில் இருந்து திரைப்படம் தொடங்குகிறது. பின்னர் அவரின் குழந்தைப்பருவம் விவரிக்கப்பட்டு, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு இந்திய பண்டைய இலக்கியங்கள் ஆகிய ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றை படிப்பதில் நேரத்தை செலவிடும் பகுதிகள் விவரிக்கப்படுகின்றது. தியானம் செய்ய ஆரம்பித்த இராமகிருஷ்ணர் பின்னர் கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அங்குள்ள காளி கோயிலில் மதபோதகராக வேலை சேர்ந்தார். பின்னர் சிறிது சிறிதாக அவரின் வேலையை விட்டுவிட்டு காடுகளுக்கு சென்று பல நாட்களாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். இறுதியாக இராமகிருஷ்ணர் துறவியாக மாறினார். இறுதி நாட்களில் தொண்டைப் புற்று நோய்க்கு ஆளான இராமகிருஷ்ணர் அப்போதும் விடாமல் சாகும் வரை போதனைகளை செய்துள்ளார்.
நடிகர்கள்
தொகு- விக்னேஷ் (குழந்தைப்பருவ இராமகிருஷ்ணர்)
- சசிகுமார் - இராமகிருஷ்ணர்
- டெல்லி கணேஷ்
- ரவீந்திரநாத்
- சுராஜ்
- லட்சுமி
- உமா
தயாரிப்பு
தொகுஇத்திரைப்படத்தின் இயக்குநர் 74 வயது ஜி. என். தாஸ். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். தனது ஜி. என். டி. விசன் இன்டர்நேசனல் பிரைவேட் லிமிடெட் சார்பாக, இத்திரைப்படத்தை தயாரித்தார். ராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்புவதற்காக, அவரின் குழந்தைப் பருவம் முதல் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆகும்.
வெளியீடு
தொகுஇத்திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 17 ஆகத்து, 2012 அன்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் இத்திரைப்படம் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. 24 நவம்பர் 2012 ஆம் ஆண்டு இத்திரைப்படம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டது. அதனை சிங்கப்பூரின் துணை முதல் மந்திரி தர்மன் சண்முகரத்தினம் பார்வையிட்டார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Feature film on Sri Ramakrishna Paramahamsa". The Hindu. 15 August 2012 இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131004161220/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/feature-film-on-sri-ramakrishna-paramahamsa/article3773805.ece. பார்த்த நாள்: 4 October 2013.
- ↑ "Sri Ramakrishna Dharisanam review". The Times of India. 12 August 2012 இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131004162518/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/movie-reviews/Sri-Ramakrishna-Dharisanam/movie-review/15531877.cms. பார்த்த நாள்: 4 October 2013.