மந்திரன்

2005 திரைப்படம்

மந்திரன் (Manthiran) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் - நாடகத் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அம்சவர்தன், சுருதி ஆகியோர் நடித்தனர். இப்படமானது பொன் நவராசுவின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[1]

மந்திரன்
இயக்கம்ரவிச்சந்திரன்
தயாரிப்புரவிச்சந்திரன்
கதைரவிச்சந்திரன்
இசைதினா (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுகார்த்திக்ராஜா
கலையகம்சாய்பாபா கிரியேசன்ஸ்
வெளியீடு8 திசம்பர் 2005 (2005-12-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

ரவிச்சந்திரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் அவரது மகன் அம்சவர்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அம்சவர்தனின் சகோதரரான பாலாஜி இப்படத்தை இணைந்து தயாரித்தார். ராகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அபிநயஸ்ரீ ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடினார். பாடல்களுக்கு ஸ்ரீதர் மற்றும் கே.சிவசங்கர் ஆகியோர் நடன அசைவுகளை அமைத்தனர்.[2]

வெளியீடு

தொகு

சிஃபி எழுதிய விமர்சனத்தில், "படத்தில் திருப்பம் ஏதும் இல்லை, மந்திரன் சமீபத்திய மழையைப் போலவே சோர்வாக இருக்கிறது" என்றது.[3] படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[4]

குறிப்புகள்

தொகு
  1. "Yesteryear Tamil film hero Ravichandran dead". The New Indian Express.
  2. "Action laced with romance". The Hindu. June 24, 2005.
  3. "Manthiran". Sify.
  4. "Never say die". The Hindu. December 31, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரன்&oldid=3660609" இலிருந்து மீள்விக்கப்பட்டது