ராசன் பி. தேவ்
ராசன் பி. தேவ்(20 மே 1954 - 29, சூலை, 2009)[1] கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் 1951-ம் ஆண்டு பிறந்தார். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு நாடக நடிகராக இருந்து 1980- திரையுலகில் நடிகராக அறிமுகமானார். மலையாள திரையுலகில் தனது நடிப்பாற்றலால் மிக முக்கிய வில்லன் கதாபாத்திரமாக வரத் தொடங்கினார். பல ஆண்டுகாலமாக திரைப்பட உலகில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்து வந்த ராசன் பி. தேவ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சூரியன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஜென்டில்மேன், லவ் டுடே, பூமகள் ஊர்வலம், தாலி காத்த காளியம்மன், பெரிய இடத்து மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்து, தமிழ் இரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். சினிமாவில் பொதுவாக வில்லன்கள் முரட்டு ஆட்களாக இருப்பது வழக்கம். அந்த நிலையை மாற்றி, நகைச்சுவை மிகுந்த வில்லத்தனத்துடன் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் ராசன் பி. தேவ்.
ராசன் பி.தேவ் | |
---|---|
![]() ராசன் பி.தேவ் மலையாள நடிகர் | |
பிறப்பு | மே 20, 1954 சேர்த்தலை, ஆலப்புழா |
இறப்பு | 29 சூலை 2009 கொச்சி, கேரளம், இந்தியா | (அகவை 58)
பணி | நாடக மற்றும் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் |
வாழ்க்கைத் துணை | சாந்தா |
ஜூப்லி தியேட்டர் என்ற சொந்த நாடகக் குழுவையும் பல ஆண்டு காலமாக நடத்தி வந்தவர். 'காட்டுக்குதிரை' என்ற நாடகம் தான் இவரது கலையுலக வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.[2] இவர் கடைசியாக நடித்த படம் சமீபத்தில் கேரளாவின் வெற்றி படமான 'என் பட்டணத்தில் பூதம்' என்ற படமாகும்.
இவர் சூலை 29, 2009 அன்று காலை கொச்சியில் ஈரல் பாதிக்கப்பட்டு காலமானார்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "ராசன் பி. தேவ் ஐஎம்டிபி தளத்தில்". http://www.imdb.com/name/nm0222145/. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2012.
- ↑ "അഭിനയകലയിലെ 'കാട്ടുകുതിര'". http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0907/29/1090729024_1.htm. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2012.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.vikatan.com/cinema/2009/jul/cinema1001.asp.