தம்

எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தம் என்பது 2003 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஏ. வெங்கடேஷ் இயக்கி பூரி ஜெகன்நாத் எழுதிய இப்படத்தில் சிலம்பரசன், ரக்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஷிஷ் வித்யார்த்தி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2002ஆம் ஆண்டைய கன்னட திரைப்படமான அப்புவின் மறு ஆக்கம் ஆகும்.[1]

தம்
இயக்கம்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்புராக்ளின் வெங்கடேஷ்
கதைபிரசன்னகுமார் (உரையாடல்)
இசைதேவா
நடிப்புசிலம்பரசன்
ரக்சிதா
ஆஷிஷ் வித்யார்த்தி
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்ராக்ளின் புரோடக்சன்ஸ்
வெளியீடுஏப்ரல் 12, 2003 (2003-04-12)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சத்யா ( சிலம்பரசன் ) ஒரு காவலரின் மகன். சத்யா சண்டையில் ஈடுபட்டு சிறைக்கு செல்கிறான். அங்கு அவனது தந்தையே அவனை பிணையில் விடுவிப்பார். விருந்தில் குடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர்களின் ஒரு குழு அவனை அடித்து உதைக்கிறது. அப்போது அங்குவந்த சுசித்ரா ( ரக்சிதா ) அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதி கொடுக்கிறாள். அவள் ஒரு காவல் ஆணையரின் மகள். இதன் பின்னர், சத்யா சுசித்ராவை காதலிக்கிறான். இது படத்தின் பிற்பகுதியில் சத்யா தைரியமாக எதிர்கொள்ளவேண்டிய பல சிக்கல்களுக்கு காரணமாகிறது. இறுதியில், அனைத்தும் சரியாகிறது. மேலும் இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கபட்டதற்கான கடிதத்தையும் சத்யா பெறுகிறான்.[2]

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்த படம் துவக்கத்தில் தெலுங்கு பதிப்பை ஒட்டி இடியட் என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் பெயர் மாற்றப்பட்டது.[3] ஏ. வெங்கடேஷ் இந்த படத்தை பூரி ஜகன்தாத்தின் 2002 ஆண்டைய கன்னட திரைப்படமான அப்பு படத்தின் மறு ஆக்கமாக தயாரித்தார். இது தெலுங்கில் 2002 இல் இடியட் என மறு ஆக்கம் செய்யப்பட்டது. இயக்குநர் வெங்கடேஷ் இப்படத்தில் கிரண் ராத்தோட்டை நடிக்க வைக்க முதலில் ஆர்வமாக இருந்தார். ஆனால் பின்னர் படத்தின் மூன்று பதிப்புகளிலும் தோன்றிய ரக்சிதாவையே தேர்ந்தெடுத்தார்.[4] படம் தயாரிக்கும் போது, சிலம்பரசன் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து ஆபத்தான தாவல் உட்பட தானே சொந்தமாக சாகச காட்சிகளில் நடித்தார்.[5]

வெளியீடு தொகு

தம் படமானது சிம்புவின் முதல் வணிக வெற்றிப் படமாகும்.[6]

இசை தொகு

படத்தில் தேவா இசையமைத்த எட்டு பாடல்கள் உள்ளன. சபேஷ் முரளி படத்தின் பின்னணி இசையை மேற்கொண்டார். அசல் தெலுங்கு திரைப்படமான இடியட்டில் இருந்து சாணக்யா, பொல்லாத படவா, மனசே பாடல்களின் மெட்டுகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. பா. விஜய் மற்றும் கபிலன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 "அட்ரா அட்ரா டம்" சிலம்பரசன், சபேஷ் சிலம்பரசன்
2 "சாணக்யா சாணக்யா" சாதனா சர்கம் பா. விஜய்
3 "கலக்குவேன் கலக்குவேன்" I சங்கர் மகாதேவன் வாலி
4 "கலக்குவேன் கலக்குவேன்" II சங்கர் மகாதேவன்
5 "கண்ணம்மா கண்ணம்மா" உதித் நாராயண், அனுராதா ஸ்ரீராம் கபிலன்
6 "கருப்போ சிவப்போ" சிலம்பரசன் பா. விஜய்
7 "மனசே மனசே" ஹரிஹரன்
8 "பொல்லாத படவா" மகாலட்சுமி ஐயர், கே.கே.

குறிப்புகள் தொகு

  1. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/from-school-master-to-u-turn-a-look-at-kannada-films-remade-in-other-indian-languages/articleshow/75161463.cms
  2. "Simbhu". Archived from the original on 2 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-12-20.
  3. "Nilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services". பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  4. https://web.archive.org/web/20031212223531/http://www.cinesouth.com/masala/07122002/news01.shtml
  5. "We've the best of both worlds'". p. 02. Archived from the original on 6 ஏப்ரல் 2005. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016 – via The Hindu (old). {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Dum was Simbu's first hit
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்&oldid=3660158" இலிருந்து மீள்விக்கப்பட்டது