கோலங்கள்
கோலங்கள் (Kolangal) 1995 இல் வெளிவந்தத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஐ. வி. சசி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹென்றி இதனைத் தயாரிக்க, , இசையமைப்பு இளையராஜா , 1995 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது[1][2]
கோலங்கள் | |
---|---|
இயக்கம் | ஐ. வி. சசி |
தயாரிப்பு | ஹென்றி |
கதை | ஆர். என். ஆர். மனோகர்]] (வசனம்) |
திரைக்கதை | ஐ. வி. சசி. |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வி. ஜெயராம் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
கலையகம் | கரோலினா பிலிம்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 15, 1995 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுகங்கா (குஷ்பூ), ஒரு தமிழ்ப்பெண் இவருக்கு இந்தி தெரியாது , மும்பையிலுள்ள தனது தோழி மாலினியை சந்திக்க வருகிறார். அங்கு பைரவனை (ரகுவரன்) சந்திக்கிறார், மாலினியைத் தனக்கும் தெரியும் என்று கூறி கங்காவை ஒரு விடுதியில் விற்று விடுகிறார். அங்கு சென்ற தமிழ்நாடு காவல்துறை விடுதியிலுள்ள அனைத்து தமிழ்ப்பெண்களையும் காப்பாற்றுகின்றனர். ஆனந்த் (ஜெயராம்) என்ற காவல் அதிகாரி கங்காவின் நிலைமையை அறிந்து யாருக்கும் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொள்கிறார்.,
ஆனந்தின் தாய் கற்பகம் (கே. ஆர். விஜயா), மாமா, சுந்தரபாண்டி (ஆர். சுந்தர்ராஜன்), அண்ணன். சங்கர் மற்றும் அவரது குடும்பம், ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.பைரவன் கங்கைவைத் தேடி அங்கே வர, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை எவ்வாறு ஆனந்தும், கங்காவும் எதிர்கொள்கின்றனர் என்பது படத்தின் முடிவு சொல்கிறது.
நடிகர்கள்
தொகு- ஜெயராம் - ஆனந்த்
- குஷ்பூ - கங்கா
- ரகுவரன் - பைரவன்
- ராஜா - ராஜேஷ்
- கஸ்தூரி - உமா
- சரத் பாபு - சங்கர்
- வைஷ்ணவி - அர்ச்சனா
- சஞ்சய் - விஜய்
- சங்கவி - சங்கீதா
- கே. ஆர். விஜயா - கற்பகம்
- ஆர். சுந்தர்ராஜன் - சுந்தரபாண்டி
- செந்தில் - முருகா
- வாசுகி - அஞ்சலி
- நாசர்
- நிழல்கள் ரவி
- டெல்லி கணேஷ்
- விஜய சந்திரிகா
- ஷர்மிளி - சரோஜா
- குமரி முத்து
- ஆர். என். ஆர். மனோகர் - மாதவன்
தயாரிப்பு
தொகுஆரம்பத்தில் இயக்குநர் பரதன் இயக்குவதாக இருந்தது, ஆனால் ,பின்னர் அவருக்கு பதிலாக ஐ. வி. சசி இயக்கினார்.. மேலும் படத்தயாரிப்பின் போது இயக்குநர் பிரதாப் போத்தன் இயக்குவதாகவும் , நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் நடிப்பதாகவும் ஒரு வதந்தி இருந்தது, ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.[3]
விருதுகள்
தொகு1995 தமிழக அரசு திரைப்பட விருதுகள்
- வெற்றி – தமிழக அரசு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளில் இரண்டாம் பரிசினை பெற்றது
- வெற்றி – சிறந்த நடிகை - குஷ்பூ
ஒலித்தொகுப்பு
தொகுKolangal | |
---|---|
soundtrack
| |
வெளியீடு | 1995 |
ஒலிப்பதிவு | 1995 |
இசைப் பாணி | Feature film soundtrack |
நீளம் | 33:12 |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
1995இல் வெளிவந்த ஆறு பாடல்கள் அடங்கிய இதன் இசையமைப்பு இளையராஜா. 1995, பாடல்களை வாலி எழுதியுள்ளார்.[4][5]
எண் | பாடல் | பாடியோர் | காலம் |
---|---|---|---|
1 | 'மௌன ராகம்' | எஸ். ஜானகி | 5:16 |
2 | 'நேத்து பாத்தாலே' | மனோ, எஸ். ஜானகி | 7:01 |
3 | 'ஒரு கூத்தில்' | மனோ, லேகா | 5:10 |
4 | 'தமிழன் படைச்சு' | மனோ, சித்ரா | 5:04 |
5 | 'தெற்கு வீசும்' | அருண்மொழி ,லேகா | 5:47 |
6 | 'உல்லாச பூங்கதிரே' | சித்ரா | 4:54 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kolangal (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
- ↑ "Filmography of kolangal". cinesouth.com. Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
- ↑ https://groups.google.com/forum/#!searchin/soc.culture.tamil/sandya$20sitaraman/soc.culture.tamil/ji-Dgf1DoZ8/khKSU6YfU1kJ
- ↑ "Kolangal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.
- ↑ "Download Kolangal by Ilaiyaraaja on Nokia Music". music.ovi.com. Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-05-09.