பாலைவன ரோஜாக்கள்

மணிவண்ணன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாலைவன ரோஜாக்கள் (Palaivana Rojakkal) 1986-இல் இந்திய தமிழ் மொழியில் வெளிவந்த அரசியல் திரைப்படம். இதற்கு திரைக்கதை எழுதியவர் மு. கருணாநிதி. இப்படத்தை இயக்கியவர் மணிவண்ணன். இது மலையாள மொழிப் படமான "வர்தா"வின் மறு ஆக்கமாகும். இப்படத்தில் சத்யராஜ், லட்சுமி, நளினி மற்றும் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். "பாலைவன ரோஜாக்கள்" நவம்பர் 1, 1986-இல் திரையிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

பாலைவன ரோஜாக்கள்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புமுரசொலி செல்வம்
திரைக்கதைமு. கருணாநிதி
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
லட்சுமி
நளினி
பிரபு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புபி. வெங்கடேஸ்வர ராவ்
கலையகம்பூம்புகார் புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுநவம்பர் 1, 1986 (1986-11-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்திரிகையாளர் சபாரத்தினம், அவரது காதலர் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் சேர்ந்து கெட்ட அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த ஒரு ஊழல் அமைப்புடன் போராடுகின்றனர்.

நடிப்பு

தொகு

தயாரிப்பு

தொகு

அரசியல்வாதியான மு. கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமான பூம்புகார் புரொடக்‌ஷன்ஸ் 1986-இல் வெளிவந்த மலையாள மொழிப் படமான "வர்தா"வை தமிழில் "பாலைவன ரோஜாக்கள்" என்கிற பெயரில் மறு ஆக்கம் செய்ய முன்வந்தது.[4].[5] இப் படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் முரசொலி செல்வம் தயாரித்துள்ளார்.[1][3] வெற்றிப் படத்தின் மறு ஆக்கமாக இருப்பதால் சத்யராஜ் இதில் நடிப்பதாக ஒத்துக்கொண்டு தனது பங்கை சிறப்பாகச் செய்வதாகக் கூறியுள்ளார்.[6] இப் படத்தின் ஒளிப்பதிவை ஏ. சபாபதியும், படத்தொகுப்பை பி. வெங்கடேஸ்வர ராவும் செய்துள்ளனர்.[3] இக் கதையின் ஆரம்பத்திலும் முடிவிலும் கருணாநிதி திரையில் தோன்றி பேசுகிறார்.[1][7]

கருப்பொருள்கள்

தொகு

பாலைவன ரோஜாக்கள் ஊடகச் சுதந்திரம் பற்றியும்,[8] ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கதாநாயகனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை விவரிக்கிறது.[9] எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையில், வரலாற்றாளர் கனகலதா முகுந்த் கருணாநிதியைப் பற்றி, மனோகரா(1954)வில் அவர் "மிகுந்த வியத்தகு, அசாதாரண உரையாடல்களுடன் பார்வையாளர்களை உணர்ச்சி பூர்வமாக கவர்ந்தார்". இப் படம் "அவரது அரசியல் செய்தியை வெளிப்படுத்த மிகவும் சிறப்பான மற்றும் அதிநவீன பாணி" என்று குறிப்பிட்டுள்ளார்.[10] திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் "பாலைவன ரோஜாக்கள்" படத்தை கருணாநிதியின் பராசக்தி (1952) திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.[7]

இப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா; பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்.[11]

வெளியீடு மற்றும் வரவேற்பு

தொகு

பாலைவன ரோஜாக்கள் நவம்பர் 1, 1986-இல் தீபாவளியன்று வெளியிடப்பட்டது.[12][13] நவம்பர் 7,1986 தேதியிட்ட இந்தியன் எக்சுபிரசு நாளேட்டில், பேனா முனையானது கூர்வாளின் முனையை விட வலிமையானது என்பதைப்போல கருணாநிதியின் வசனங்கள் இப்படத்தில் உள்ளன எனவும், படத்தின் வலிமை வாழும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கிறது எனவும் விமர்சனம் செய்யப்பட்டது.[1] ஆனந்த விகடன், நவம்பர் 23, 1986 வார இதழில் இப்படத்திற்கு 100க்கு 51 மதிப்பெண்கள் வழங்கியது.[14] கருணநிதியின் இறப்பிற்கு பின்னர், ஆகஸ்டு 2018-இல் பரத்வாஜ் ரங்கன் இத்திரைப்படம் மாவீரன் (1986 திரைப்படம்) மற்றும் புன்னகை மன்னன் போன்ற வெற்றிப் படங்களுக்கிடையில் கருணாநிதியின் பேனாவில் உதித்த, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய படம் என்று குறிப்பிட்டுள்ளார்.[7][15]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Fruits of Honesty". இந்தியன் எக்சுபிரசு (Indian Express Limited): p. 14. 7 November 1986. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19861107&printsec=frontpage&hl=en. 
  2. "'உங்கள் உப்பு என் உழைப்புக்குத்தானே தவிர என் உடலுக்கில்லை' - கருணாநிதியின் பெண் கதாபாத்திர வசனங்கள் #MissUKarunanidhi" (in ta). ஆனந்த விகடன். 10 August 2018 இம் மூலத்தில் இருந்து 7 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190207111616/https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/133553-meet-some-female-characters-created-by-legendary-karunanidhi.html. 
  3. 3.0 3.1 3.2 Palaivana Rojakkal [Desert Roses] (motion picture). Poompuhar Productions. 1986. Opening credits, from 0:00 to 7:55.
  4. Krishnaswamy, N. (24 April 1987). "Politics again". இந்தியன் எக்சுபிரசு (Indian Express Limited): pp. 12. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870424&printsec=frontpage&hl=en. 
  5. Pillai, Sreedhar (15 January 1988). "Rush of contenders for top place in Tamil films". இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 21 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180621144846/https://www.indiatoday.in/magazine/society-the-arts/films/story/19880115-rush-of-contenders-for-top-place-in-tamil-films-796855-1988-01-15. 
  6. Sunil, K. P. (29 November 1987). "The Anti-Hero". தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா. Vol. 108. The Times Group. pp. 40–41.
  7. 7.0 7.1 7.2 Rangan, Baradwaj (8 August 2018). "Five Highlights From Karunanidhi's Film Career". Film Companion. Archived from the original on 7 February 2019. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  8. Thiagarajan, Shantha (9 August 2018). "An idyllic setting that boosted M Karunanidhi’s creativity". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 7 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190207094620/https://timesofindia.indiatimes.com/city/coimbatore/an-idyllic-setting-that-boosted-m-karunanidhis-creativity/articleshow/65334383.cms. 
  9. Maderya, Kumudan (2010). "Rage against the state: historicizing the “angry young man” in Tamil cinema". Jump Cut. https://www.ejumpcut.org/archive/jc52.2010/Tamil/text.html. 
  10. Mukund, Kanakalatha (1996). "Ideology vs Methodology?". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி. Vol. 31. Sameeksha Trust. p. 1881.
  11. Ilaiyaraaja (1986). பாலைவன ரோஜாக்கள் [Desert Roses] (liner notes). Echo Records.
  12. Rathinagiri, R. (2007). Time capsule of Kalaignar. திராவிட முன்னேற்றக் கழகம். p. 67.
  13. "Palaivana Rojakkal". இந்தியன் எக்சுபிரசு (Indian Express Limited): p. 7. 1 November 1986. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19861101&printsec=frontpage&hl=en. 
  14. "பாலைவன ரோஜாக்கள்" [Desert Roses]. ஆனந்த விகடன். 23 November 1986.
  15. "Rajinikanth turns 67: More than moondru mugam". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Indian Express Limited). 11 December 2017 இம் மூலத்தில் இருந்து 20 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180420112329/http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/dec/11/rajinikanth-turns-67-more-than-moondru-mugam-1724738.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_ரோஜாக்கள்&oldid=4120920" இலிருந்து மீள்விக்கப்பட்டது