கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா (Kizhakku Africavil Sheela) என்பது 1987 இல் துவாரகீசு தயாரித்து இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 1986 இல் வெளிவந்த கன்னடத் திரைப்படமான ஆப்பிரிக்கடால்லி ஷீலாவின் மறுஆக்கமாகும். ஷீனா, குயின் ஆஃப் தி ஜங்கிள் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட, இத்திரைப்படத்தில் சுரேசு, சகிலா சதா, நிழல்கள் ரவி, காஞ்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 1987 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்துவாரகீசு
தயாரிப்புதுவாரகீசு
கதைதுவாரகீசு,
பி. சங்கர் (வசனம்)
இசைபப்பி லஹரி
நடிப்புசுரேசு
சகிலா சதா
காஞ்சனா
ஒளிப்பதிவுஆர். தேவிபிரசாத்
படத்தொகுப்புகௌதம்ராஜ்
கலையகம்துவாரகீசு சித்ரா
வெளியீடு14 சனவரி 1987 (1987-01-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

ஒரு மருத்துவர் தனது மனைவியுடன் பழங்குடியினருக்கு உதவ ஆப்பிரிக்காவின் இருண்ட கண்டத்திற்குச் செல்கிறார். அது முடிவதற்குள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். அவர்களது மகள் குரங்குகளால் வளர்க்கப்பட்டு, ஷீலாவாக வளர்கிறாள். மருத்துவரின் தந்தை தனது மகனைத் தேட ஒரு குழுவை அனுப்புகிறார். இந்த பயணக் குழுவின் உறுப்பினர்களுக்கு வேறு இலக்குகள் உள்ளன என்பது அவருக்குத் தெரியவில்லை. பயணத்தின் உறுப்பினர்களில் ஒருவர் அவர்களின் நகர்வுகளை எவ்வாறு சரிபார்த்து மீட்புப் பணிகளைச் செய்கிறார் என்பது கதையின் மற்ற காட்சிகளை உருவாக்குகிறது.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்பது 1986 இல் வெளியான கன்னடத் திரைப்படமான ஆப்பிரிக்காடல்லி ஷீலாவின் மறுஆக்கமாகும்.[2] இத்திரைப்படம் ஷீனா, குயின் ஆஃப் தி ஜங்கிள் நடித்த படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இத்திரைப்படம் முக்கியமாக ஜிம்பாப்வேயில் படமாக்கப்பட்டது. துவாரகீசு அவரால் இயக்கப்பட்டு.[1] அவரது துவாரகீசு சித்ரா என்ற பதாகையின் கீழ் அவரால் தயாரிக்கப்பட்டது.[3] கன்னடத்தில் ஷீலா என்ற பெயரில் நடித்த சகிலா சதா, மறுஆக்கத்தில் தனது பாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.[1]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு பப்பி லகரி இசையமைத்திருந்தார். பின்னணி இசையை விஜய் ஆனந்த் மேற்கொண்டார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார். [4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஷீலா ஷீலா"  பப்பி லஹரி, நசியா ஹாசன்  
2. "ஷீலா ஓ மை ஷீலா"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா  
3. "தக்க திமி தன"  கே. எஸ். சித்ரா  
4. "பூவு இருக்க காயும் இருக்கு"  மஞ்சுளா  
5. "செம்மேனி பொண்ணு"  கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா  

வெளியீடும் வரவேற்பும்

தொகு

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா 1987 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டது. 1987 பெப்ரவரி 6 நடத்தப்பட்ட ஒரு மதிப்பாய்வில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இத்திரைப்படம் பெரும்பாலும் "பட்டியிலிடாத" தொலைக்காட்சித் தொடரான அப்பு அவுர் பப்புவை ஒத்திருப்பதாக உணர்ந்தது. என்று எழுதியது. ஏனெனில் இது அக்காலத்தில் பொதுவாக இருந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு அதிரடித் திரைப்படங்களைப் போலவே "குறைந்ததாகவும் குப்பையாகவும்" இருந்தது. விமர்சகர் வில்லன்களின் குணாதிசயங்களை விமர்சித்தார், ஆனால் பப்பி லஹிரியின் "கவர்ச்சியான குத்து பாடலில்" டிஸ்கோ சாந்தியின் "நடனத்தைப்" பாராட்டினார். கல்கியின் ஜெயமன்மதன் இப்படத்தைத் தமிழ் அல்லாத வேறு மொழியில் சிறப்பாகச் செய்திருக்கலாம் எனக் கூறினார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Trashy". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. 6 February 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870206&printsec=frontpage&hl=en. 
  2. "Sheela". Archived from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
  3. "1987-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்". Archived from the original on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
  4. "Kizhaku Africavil Sheela Tamil Film LP Vinyl Record by Bappi Lahiri". Banumass. Archived from the original on 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
  5. ஜெயமன்மதன் (8 February 1987). "கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா". Kalki. p. 38. Archived from the original on 30 July 2022. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.

வெளி இணைப்புகள்

தொகு