காஞ்சனா (நடிகை)

காஞ்சனா 1960 மற்றும் 70 களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் அவர் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம்.

சிவாஜியுடன் சிவந்த மண் படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற பாடலுக்கு அவர் ஆடியது ரசிகர்களை ஈர்த்தது. சாந்தி நிலையம், நான் ஏன் பிறந்தேன், அதே கண்கள், காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_(நடிகை)&oldid=2989448" இருந்து மீள்விக்கப்பட்டது