உச்சி வெயில்
உச்சி வெயில் (Uchi Veyil) என்பது 1990 ஆம் ஆண்டு ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[2]
உச்சி வெயில் Uchi Veyil | |
---|---|
இயக்கம் | ஜெயபாரதி |
தயாரிப்பு | டி. எம். சுந்தரம் |
திரைக்கதை | இரவீந்திரன் இராமமூர்த்தி |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | குப்புசாமி |
ஒளிப்பதிவு | இரமேஷ் வியாஸ் |
படத்தொகுப்பு | பாலு சங்கர் |
கலையகம் | ஜூவாலா பிலிம் |
வெளியீடு | 4 நவம்பர் 1990 |
ஓட்டம் | 100−105 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- துரைசாமியாக குப்புசாமி
- சங்கராக விஜய்
- ஸ்ரீவித்யா
- சபாபதியாக டெல்லி கணேஷ்
தயாரிப்பு
தொகு13 நாட்களில் படமாக்கப்பட்ட உச்சி வெயில் திரைப்படத்தை ஜெயபாரதி இயக்கியிருந்தார்.[3] இந்திரா பார்த்தசாரதியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இரவீந்திரன் இராமமூர்த்தி திரைக்கதையை எழுதியிருந்தார்.[4][3][1] டி.எம்.சுந்தரம் ஜுவாலா பிலிம் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். திரைப்படத்தின் மொத்த செலவு ₹4.8 லட்சம் (2021இல் ₹1.2 கோடி மதிப்பாகும்).
[5][3] ஒளிப்பதிவை இரமேஷ் வியாஸ் மேற்கொண்டார்,[6] படத்தொகுப்பை பாலு சங்கர் மேற்கொண்டார்.[1][7]இத்திரைப்படத்திற்கு எல். வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்.[6] திரைப்படத்தில் பாடல்களோ நட்சத்திர நடிகர்களோ இடம்பெறவில்லை.[7][3][4]
வெளியீடு, வரவேற்பு
தொகுஇத்திரைப்படம் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும், 1990இல்[8] நடைபெற்ற சர்வதேச டொராண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்படம் வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Suze (17 September 1990). "Uchchi Veyil (High Noon)". Variety. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8352-3089-6.
- ↑ "Uchi Veyil (High Noon)". Cinemaazi. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Rajadhyaksha & Willemen 1998, ப. 494.
- ↑ 4.0 4.1 S. R., Balu (21 January 1990). "அவார்டுக்கு அனுப்பப்பட்ட படங்கள்" [Films sent for awards]. கல்கி. p. 38. Archived from the original on 31 July 2022. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.
- ↑ Sundaram, T. M. (1991). "To Fade Out". Sûrya India. Vol. 16. p. 39.
- ↑ 6.0 6.1 Baskaran 1996, ப. 167.
- ↑ 7.0 7.1 Baskaran 1996, ப. 168.
- ↑ Baskaran 1996, ப. 169.
- ↑ Mannath, Malini (25 December 2002). "Excerpts from an interview with director Jayabharati". Chennai Online. Archived from the original on 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.