விட்னஸ் (1995 திரைப்படம்)

விட்னஸ் (Witness) 1995 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி மற்றும் கெளதமி நடிப்பில், தக்காளி சீனிவாசன் இயக்கத்தில், பிரேமி-சீனி இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]

விட்னஸ்
இயக்கம்தக்காளி சீனிவாசன்
தயாரிப்புடி. ஜி. எப். மீடியா சிஸ்டம்ஸ் லிமிடெட்
கதைதக்காளி சீனிவாசன்
இசைபிரேமி
சீனி
நடிப்பு
ஒளிப்பதிவுதயாள் ஓஷோ
படத்தொகுப்புகே. எஸ். கார்த்திகேயன்
கலையகம்டி. ஜி. எப். மீடியா சிஸ்டம்ஸ் லிமிடெட்
வெளியீடுசூலை 14, 1995 (1995-07-14)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

சென்னையில் பால்வினைத் தொழில் செய்யும் மூன்று பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். காவல் ஆய்வாளர் விக்ரம் (நிழல்கள் ரவி) அவ்வழக்கை விசாரிக்கிறார். நான்காவதாக ஒரு பெண் கொலை செய்யப்படும்போது, இறப்பதற்கு முன் அவள் ஒருவனோடு செல்வதைத் தற்செயலாக படம்பிடிக்கும் உமா (ஆமணி) அதை விக்ரமிடம் காட்டுகிறாள். அந்தப் புகைப்படத்தில் இருப்பவன்தான் கொலைகாரன் என்று முடிவுசெய்து அவனைத் தேடுகின்றனர்.

அப்புகைப்படத்தில் இருப்பவன் நிரஞ்சன் (லிவிங்ஸ்டன்). அவன் மும்பை காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி என்றும், தன் குற்றங்களுக்காக சிலமுறை சிறை சென்றிருக்கிறான் என்றும் கண்டறிகிறார் விக்ரம். நிரஞ்சன் இருக்கும் இடத்தின் தகவல் கிடைக்கவே, அங்கு சென்று அவனைக் கைது செய்கின்றனர். நீதி மன்றத்தில் தான் ஒரே ஒரு கொலை செய்ததாகவும், மற்றவர்களைத் தான் கொலை செய்யவில்லை என்றும் சொல்கிறான். அதை மறுத்து அவன்தான் நான்கு கொலைகளும் செய்தவன் என்று நிரூபிக்கிறார் வழக்கறிஞர் பிரியா (கௌதமி). நிரஞ்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்பிறகும் பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்கிறது. இதனால் தாங்கள் தவறு செய்துவிட்டதாக என்னும் விக்ரம் மற்றும் பிரியா உண்மையானக் கொலையாளியைத் தேடுகின்றனர்.

இதேபோன்ற கொலைகள் மதுரையில் நடந்ததாகவும் அதை விசாரித்த தன் கணவர் ரமேஷ் (ரகுவரன்) மற்றும் சகோதரன் சுரேஷ் (சுரேஷ்) குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்யப்போகையில் விபத்தில் இறந்ததாகவும் கூறுகிறாள் பிரியா. உண்மையான கொலையாளி யார்? ஏன் கொலைகளைச் செய்கிறான்? என்பதை கூறுகிறது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் பிரேமி-சீனி. பாடலாசிரியர் முத்து பாரதி.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கண்ணில் ஒரு மின்னல் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா 4:17
2 நான் உன்னைத்தான் சித்ரா 3:49
3 வதம் கொள்ளை மனோ 0:57

மேற்கோள்கள்

தொகு
  1. "விட்னஸ்".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "விட்னஸ்". Archived from the original on 2009-09-03. Retrieved 2022-07-30.
  3. "விட்னஸ்". Archived from the original on 2004-11-26. Retrieved 2022-07-30.
  4. "விட்னஸ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னஸ்_(1995_திரைப்படம்)&oldid=4118712" இலிருந்து மீள்விக்கப்பட்டது