பாசப் பறவைகள்

கொச்சி ஹனீஃபா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாசப் பறவைகள் (Paasa Paravaigal) என்பது 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கொச்சி ஹனீஃபா இயக்கினார். இப்படத்தின் கதை மு. கருணாநிதி எழுதியது, இப்படத்தில் சிவகுமார், லட்சுமி, மோகன் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இது 1986 ஆம் ஆண்டு ஹனீபாவின் சொந்த மலையாளப் படமான மூனு மாசன்களுக்கு மும்புவின் ரீமேக்காகும். இப்படம் 1988 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. இது இரண்டாவது சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றது. மேலும் நடிகை ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - தமிழில் பெற்றுத் தந்தது.

பாசப் பறவைகள்
இயக்கம்கொச்சி ஹனீஃபா
தயாரிப்புமுரசொலி செல்வம்
திரைக்கதைமு. கருணாநிதி (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
லட்சுமி
மோகன்
ராதிகா
ஒளிப்பதிவுஏ. வின்சென்ட்
படத்தொகுப்புபி. வெங்கடேஸ்வர ராவ்
கலையகம்பூம்புகார் புரொடக்ஷன்ஸ்
வெளியீடுஏப்ரல் 29, 1988 (1988-04-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

பாசப் பறவைகள் ஹனீபாவின் சொந்த மலையாளப் படம் மூனு மாசன்களுக்கு மும்புவின் மறுபதிப்பு ஆகும். மோகன் முதன்முறையாக இத்தமிழ் படத்தில் தனது சொந்தக் குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் இயற்றினார்.[1][2]

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "தென்பாண்டி தமிழே என்" கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 04:10
2 "மாப்பிள்ளையே மாப்பிள்ளையே" இளையராஜா, மலேசியா வாசுதேவன் 04:32
3 "தென்பாண்டி தமிழே" – 2 கே. ஜே. யேசுதாஸ் 04:28
4 "தென்பாண்டி தமிழே" – (சோகம்) இளையராஜா

மேற்கோள்கள் தொகு

  1. "Paasa Paravaigal 1988". Music India Online. https://web.archive.org/web/20160808112047/http://mio.to/album/Paasa+Paravaigal+(1988) from the original on 8 August 2016. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. "Paasa Paravaigal Tamil Film EP Vinyl Record by Ilaiyaraja". Mossymart. https://web.archive.org/web/20210601103005/https://mossymart.com/product/paasa-paravaigal-tamil-film-ep-vinyl-record-by-ilaiyaraja/ from the original on 1 June 2021. பார்க்கப்பட்ட நாள் 19 February 2021. {{cite web}}: |archive-url= missing title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசப்_பறவைகள்&oldid=3738327" இலிருந்து மீள்விக்கப்பட்டது