அபிமன்யு (1997 திரைப்படம்)

கே. சுபாஷ் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அபிமன்யு (Abhimanyu) 1997 ஆம் ஆண்டு பார்த்திபன் மற்றும் ரவளி நடிப்பில், கே. சுபாஷ் இயக்கத்தில், சி. சிரஞ்சீவி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].

அபிமன்யு
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புசி. சிரஞ்சீவி
கதைகே. சுபாஷ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். வி. பன்னீர்செல்வம்
படத்தொகுப்புமுகம்மது ராஜா
கலையகம்ஸ்ரீ சரண் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 5, 1997 (1997-09-05)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

மாசிலாமணி (ரகுவரன்) சட்ட விரோதமான செயல்களை செய்வபவன். காவல்துறை அதிகாரி அபிமன்யுவிற்கு (பார்த்திபன்) மாசிலாமணியைக் கைது செய்யும் பொறுப்பு வழங்கப்படுகிறது. அபிமன்யு நேர்மையான மற்றும் கண்டிப்பான துணை காவல் ஆணையர். அவரின் நேர்மையான பணிக்காகப் பலமுறை தண்டனைக்குள்ளானவர்.

மஞ்சு (ரவளி) அபிமன்யுவை காதலிக்கிறாள். மாசிலாமணியின் சட்டவிரோதத் தொழில்களை தடுக்கிறார் அபிமன்யு. இதனால் அபிமன்யுவை தன் முதல் எதிரியாக நினைக்கிறான் மாசிலாமணி. ஆனால் காவல்துறையின் உயர்பொறுப்பில் உள்ளதால் அவரைக் கொல்ல அஞ்சுகிறான். கல்லூரியில் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் அபிமன்யுவைக் கொல்ல திட்டமிடுகிறான். அத்திட்டத்தை சாதுர்யமாக முறியடிக்கிறார் அபிமன்யு. மாசிலாமணியிடம் வேலை செய்த சோமு காவல்துறையிடம் சரணடைந்து மாசிலாமணிக்கு எதிராக சாட்சி சொல்ல ஒப்புக்கொள்கிறான். ஆனால் நீதிமன்றத்தில் இருக்கும்போதே சோமுவும், காவல் அதிகாரி திரவியமும் (சந்திரசேகர்) கொல்லப்படுகின்றனர். ஆத்திரத்தில் மாசிலாமணியைத் தண்டிக்க அவன் வீட்டுக்குச் செல்லும் அபிமன்யு அங்கு அவன் மனைவி ரஞ்சிதாவைப் (கீதா) பார்த்து அதிர்ச்சியடைகிறான்.

அபிமன்யுவின் தந்தை (ஆனந்தராஜ்) காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர். அவருடைய மோசமான நடவடிக்கைகளால் கர்ப்பிணியான அபிமன்யுவின் தாய் கௌசல்யா (கீதா) அவரைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார். அபிமன்யுவின் அக்கா அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறாள். கர்ப்பிணியான கௌசல்யா சிறையில் பெற்றெடுக்கும் குழந்தைதான் அபிமன்யு. தன் தாய் இறந்துபோக அனாதையான அபிமன்யு அதன் பின் தன்னுடைய முயற்சியால் படித்துக் காவல் துறையில் வேலைக்குச் சேர்கிறான். அபிமன்யு மாசிலாமணியின் வீட்டில் சந்தித்த ரஞ்சிதா என்ற பெண்தான் தன் சகோதரி என்று தெரிந்துகொள்கிறான். அவள் மாசிலாமணியின் மனைவி என்று அறிந்து அதிர்ச்சியடைகிறான்.

அவன் தன் கடமையை நேர்மையாக செய்தானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் தேவா.[5] பாடலாசிரியர்கள் காளிதாசன், பொன்னியின் செல்வன், மயில் மற்றும் வாசன்[6][7][8].

வ.எண் பாடல் பாடகர்(கள்) காலநீளம்
1 அல்வா வாயில் அல்வா எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:23
2 ரோமியோ ஜூலியட் தேவி 4:45
3 மேடம் என்ன சபேஷ் 4:17
4 தொடு வானமாய் சித்ரா 4:48
5 தாய் உனக்கு உமா ரமணன் 5:18

மேற்கோள்கள்

தொகு
  1. "அபிமன்யு". Archived from the original on 2011-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "அபிமன்யு". Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "அபிமன்யு".
  4. "அபிமன்யு". Archived from the original on 2009-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Abhimanyu (1997)". Raaga.com. Archived from the original on 24 May 2023. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  6. "பாடல்கள்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. "பாடல்கள்". Archived from the original on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
  8. "பாடல்கள்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_(1997_திரைப்படம்)&oldid=4008127" இலிருந்து மீள்விக்கப்பட்டது