இந்தியன் 2 (Indian 2) வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார். அனிருத் பாடல்களுக்கும், பின்னணிக்கும் இசையமைக்க உள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினைச் செய்கிறார். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.[1]

இந்தியன் 2
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
கதை
இசைஅனிருத்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்லைக்கா தயாரிப்பகம்
விநியோகம்லைக்கா தயாரிப்பகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தின் தயாரிப்பு பற்றி 2017 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் முதல் நிகழ்வின் போது தகவல் வெளிவந்தது. 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த தினமான நவம்பர் 7 அன்று இத்திரைப்படம் லைக்கா தயாரிப்பகத்தால் தயாரிக்கப்பட இருப்பதாக அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தது.[5] இத்திரைப்படத்திற்கான வசனம் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லெட்சுமி சரவணக்குமார் ஆகியோரால் எழுதப்படுகிறது.[6][7] இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2018 இல் தொடங்கும் எனவும் 2019 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். கமல்ஹாசன் இத்திரைப்படத்துடன் தனது 58 ஆண்டு நடிப்புத் தொழில் நிறைவடையும் என டிசம்பர் 2018 இல் தெரிவித்தார்.[8] படப்பிடிப்பு டிசம்பர் 14 இல் தொடங்குவதாக இருந்தது.[9] ஆனால், இறுதியாக 18 ஜனவரி 2019 இல் தொடங்கியது.[10] இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 பெப்ரவரி 2019 இல் தொடங்கியது.[11]

விபத்து

தொகு

சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் 19 பிப்ரவரி 2020 ம் தேதி இரவு விபத்து நடைபெற்றது. இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். 6 ஆகஸ்ட் 2020 அன்று மாலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை திரைப்பட தொழிலாளர் சங்கம் மூலம் வழங்கப்பட்டது. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கினார்கள்.[12]

மேற்கோள்கள்

தொகு
 1. "#indian2 Hi everyone! " Happy Pongal" - Director Mohammed sajeer". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.
 2. "Indian 2 movie first look: Kamal Haasan is back as Senapathi". Indian Express. 15 January 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
 3. IANS (12 December 2018). "Signing Indian 2 has been a step up in my career: Kajal Aggarwal". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
 4. TNN (7 September 2018). "Nedumudi Venu to return in Kamal Haasan's 'Indian 2'". Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
 5. Digital Native (8 November 2018). "Lyca Productions officially announces 'Indian 2' on Kamal Haasan's birthday". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
 6. "Shankar's 'Indian 2' gets another writer in Lakshmi Saravanakumar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
 7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 8. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 9. "Shankar: Indian 2 shoot will begin on December 14". Sify. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
 10. Chakraborthy, Antara (18 January 2019). "Kamal Haasan starrer Indian 2 goes on floors". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/entertainment/tamil/kamal-haasan-starrer-indian-2-goes-on-floors-new-posters-5544120/. 
 11. http://www.sify.com/movies/kamal-haasan-denies-rumors-about-indian-2-news-tamil-tcjsbdjeedbbb.html
 12. "'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி". இந்து தமிழ். 6 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/568530-indian-2-shooting-accident.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_2&oldid=3899283" இலிருந்து மீள்விக்கப்பட்டது