இந்த நிலை மாறும்
இந்த நிலை மாறும் (Indha Nilai Maarum) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் அருண்காந்த் வி இயக்கியிருந்தார். இப்படத்தில் அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், ராம்குமார் , நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலை மாறும் | |
---|---|
Film poster | |
இயக்கம் | அருண்காந்த் வி |
தயாரிப்பு | சிவா விஜி |
கதை | அருண்காந்த் வி |
இசை | ஆலன் செபாஸ்டியன் அருண்காந்த் வி |
நடிப்பு | அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் Ramkumar நிவேதிதா சதீஷ் |
ஒளிப்பதிவு | சுகுமாரன் சுந்தர் |
படத்தொகுப்பு | அருண்காந்த் வி |
கலையகம் | பேந்தலம் சிமிமாஸ் பிரைவேட் லிமிடெட் |
விநியோகம் | இன்புளோ மீடியா ஒர்க்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 6, 2020 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சூர்யாவாக அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன்
- ராம்குமார்
- மைக்கல் ஜாக்சன்[1] போன்ற ஆடைகளை அணிந்த சாம்ஸ்
- ஒய். ஜி. மகேந்திரன்
- ஒரு பதிப்பக நிறுவனத்தின் பொது மேலாளராக டி. எம். கார்த்திக்[1]
- லட்சுமி ராமகிருஷ்ணன்
- நிவேதிதா சதீஷ்
- டெல்லி கணேஷ்
- சந்தான பாரதி
- பாண்டு
- சாரா ஜார்ஜ்
- வினோத் வர்மா
தயாரிப்பு
தொகுராம்குமார், அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன் மற்றும் நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில் 2017ஆம் ஆண்டு படத்தின் தயாரிப்பைத் தொடங்கியது.[2] ஒய். ஜி. மகேந்திரன் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் அவருக்கு உதவியாகவும் நடித்திருந்தனர்.[1] தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் படம் உருவானது.[3]
இப்படத்திற்கான பாடல்களுக்கு அருண்காந்த் வி. இசையமைத்திருந்தார்.
வெளியீடும் விமர்சனமும்
தொகுஇந்தத் திரைப்படம் 6 மார்ச் 2020 அன்று திரையிடப்பட்ட இது [4] எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாபடத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றை மட்டுமே வழங்கியது. மற்றும் "படம் எல்லா வகையிலும் விரும்பத்தகாதது, மேலும் பயங்கரமான பகுதி என்னவென்றால், காட்சிகள் மோசமாக அரங்கேற்றப்பட்ட நாடகம் போல் தோன்றுகிறது" என்றும் கூறியது.[5] மாலை மலர் படத்தின் நோக்கத்தைப் பாராட்டியது.[6] தினத்தந்தி இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டியது.[7]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sundar, Mrinalini (26 February 2017). "This one is a business thriller". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/this-one-is-a-business-thriller/articleshow/57344800.cms.
- ↑ "Indie filmmaker's novel idea to get theatrical release - Times of India". The Times of India.
- ↑ "Intha Nilai Maarum, Cinema Preview, இந்த நிலை மாறும், சினிமா முன்னோட்டம்".
- ↑ "Indha Nilai Maarum". Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ "Indha Nilai Maarum Movie Review: The film is unappealing in every ways". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/indha-nilai-maarum/movie-review/74478023.cms.
- ↑ "இணைய வானொலியால் இளைஞருக்கு ஏற்படும் பிரச்சனை - இந்த நிலை மாறும் விமர்சனம்". 6 March 2020.
- ↑ "சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளை முன்வைக்கும் படம் - இந்த நிலை மாறும்". 9 March 2020.