தாலாட்டு (தொலைக்காட்சித் தொடர்)

தாலாட்டு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 26, 2021 ஆம் ஆண்டு முதல் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷாக் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கிருஷ்ணா,[2] ஸ்ருதி ராஜ்[3] மற்றும் ஸ்ரீலதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 24 சூன் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 704 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

தாலாட்டு
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்ஹரிஷ் ஆதித்யா
நடிப்புகிருஷ்ணா
ஸ்ருதி ராஜ்
ஸ்ரீலதா
சர்வேஷ்
முகப்பிசை'தாலாட்டு'
சைந்தவி (பாடியவர்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்704[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சங்கர் வெங்கடராமன்
ஒளிப்பதிவுபானுமுருகன்
விஜயபாண்டி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ஷாக் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 ஏப்ரல் 2021 (2021-04-26) –
24 சூன் 2023 (2023-06-24)

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • கிருஷ்ணா - விஜயகிருஷ்ணன்
  • ஸ்ருதி ராஜ் - இசைப்பிரியா விஜயகிருஷ்ணன்
  • ஸ்ரீலதா - சின்னத்தாயி / தாயம்மா (விஜயகிருஷ்ணனின் தாய்)
    • சந்திரபாபு - 'இளம் வயது' சின்னத்தாயி

விஜயகிருஷ்ணனின் குடும்பத்தினர்

தொகு
  • ரிஷி கேசவ் - முத்தையா (வளர்ப்பு தந்தை)
    • கிரண் - 'இளம் வயது' முத்தையா
  • தருணி[4] - சிவகாமி முத்தையா (வளர்ப்பு தாய்)
    • ஹரிப்ரியா - 'இளம் வயது' சிவகாமி
  • சந்தோஷ் - சுந்தரமூர்த்தி (உண்மையான தந்தை மற்றும் சின்னத்தாயின் கணவன் / தொடரில் இறந்து விட்டார்)
  • சர்வேஷ் - சுந்தரமூர்த்தி விஜயகிருஷ்ணன் (விஜய் மற்றும் இசையின் மகன்)
  • சஹானா - தேவி பிரவின் (சகோதரி)
  • வினீத் - பிரவின்

இசை குடும்பத்தினர்

தொகு
  • மோகன் சர்மா - ஈஸ்வரமூர்த்தி (இசையின் தந்தை)
  • அருண்குமார் பத்மநாபன் - வாலி
  • மலர் - தாரா (வாலியின் மனைவி)

துணைக் கதாபாத்திரம்

தொகு
  • தர்சிகா - தெரசா (தாயம்மாவின் வளர்ப்பு மகள்)
  • டெல்லி கணேஷ் - கணபதி குருக்கள்
  • சர்வன் / ராஜேஷ் - ருத்திரன்
  • வின்செட் ராய் - சாம்பசிவம்
  • மீனாட்சி - மீனாட்சி சாம்பசிவம்
  • நவிந்தர் .- சுகுமார் சாம்பசிவம்
  • ஸ்ரீகலா - தேவிகா
  • டினா - அபி
  • ரேகா - வசந்தி
  • காயத்ரி ‌ஸ்ரீ - நித்யா
  • கே. எஸ். ஜி. வெங்கடேஷ் - திருஞானசம்மந்தர் (சிவகாமி & சுந்தரமூர்த்தியின் தந்தை / தொடரில் இறந்து விட்டார்)

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடரில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர் நடிக்கின்றார். இவர் இதற்க்கு முன்பு இதே தொலைக்காட்சியில் தென்றல் (2009-2015), அபூர்வ ராகங்கள் (2015-2018), அழகு (2018-2020) போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.[5] இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா என்பவர் 'விஜயகிருஷ்ணன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இருவரும் இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த தொடரின் இளவயது கதைக்கள கதாபாத்திரத்தில் சந்திரபாபு, கிரண், ஹரிப்ரியா, சந்தோஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஸ்ரீலதா, ரிஷி கேசவ், தருணி, மோகன் சர்மா, டெல்லி கணேஷ் போன்ற பல பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

தொகு

இந்த தொடர் ஏப்ரல் 26, 2021 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 18, 2021 முதல் பிற்பகல் 3 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
26 ஏப்ரல் 2021 - 16 அக்டோபர் 2021
திங்கள் - சனி
14:30 1-182
18 அக்டோபர் 2021 - ஒளிபரப்பில்
திங்கள் - வெள்ளி
15:00

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 4.2% 5.9%
4.5% 5.4%
4.3% 5.5%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Popular TV show 'Thalattu' completes 700 episodes". timesofindia.indiatimes.com. 21 June 2023. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/popular-tv-show-thalattu-completes-700-episodes/articleshow/101152384.cms. 
  2. "தெய்வமகள் கிருஷ்ணா ஹீரோவாகும் அடுத்த சீரியல் 'தாலாட்டு'.. ப்ரொமோ வெளியானது". Samayam Tamil. Retrieved 2021-04-26.
  3. "Thalattu: ஸ்ருதி ராஜ் - கிருஷ்ணா நடிப்பில் சன் டிவி-யின் புதிய சீரியல்!". News18 Tamil. Retrieved 2021-04-26.
  4. "15 வயதில் உலக நாயகன் பட அறிமுகம்.. 20 வருட சின்னத்திரை பயணம்.. தாலாட்டு சீரியல் சிவகாமி லைஃப் ஸ்டோரி!". tamil.indianexpress.com.
  5. "தென்றல் முதல் தாலாட்டு வரை…ஸ்ருதி ராஜ் கேரியர் ஸ்டோரி". tamil.indianexpress.com.

வெளி இணைப்புகள்

தொகு