காணி நிலம்
காணி நிலம் ( Kani Nilam) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அரசியல் நகைச்சுவை திரைப்படமாகும்.[1] சோ நடித்திருந்த இப்படத்தை அருண்மொழி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1987 ஆகத்து 14 அன்று வெளியிடப்பட்டது.
காணி நிலம் | |
---|---|
இயக்கம் | அருண்மொழி |
தயாரிப்பு | பாளையம்கோட்டை சண்முகம் |
திரைக்கதை | அருண்மொழி |
இசை | அருண்மொழி |
நடிப்பு | சோ |
ஒளிப்பதிவு | அருண்மொழி |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | லதா கிரியேசன்சு |
வெளியீடு | 14 ஆகத்து 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அறிவரசனாக சோ
- நிருபராக குட்டி பத்மினி
- நாகலிங்கமாக வாத்தியார் இராமன்
தயாரிப்பு
தொகுஇப்படத்தின் தலைப்பு முதலில் காணி நிலம் வேண்டும் என்றிருந்தது. அரசியல்வாதிகளை எதிர்மறையாக சித்தரித்த திரைப்படமாகும் (அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கைகளுக்கு வழிவகுக்கும் என தணிக்கைக் குழு நம்பியது). தமிழ்நாட்டைச் சார்ந்த அரசியல்வாதிகளை இழிவுபடுத்தும் பல குறிப்புகள் இருந்ததால் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு முதலில் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தது. திரைப்படம் மூன்று மாதங்கள் இழுபறியை எதிர்கொண்ட பின்னர், 18 காட்சிகளின் வெட்டுக்களுக்குப் பிறகு யூ சான்றிதழுடன் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சோ, திரைப்படம் யாரையும் இழிவுபடுத்த அல்ல: "அரசியலில் அடிமட்டத்திற்கு ஊடுருவுவதை மட்டுமே இது காட்டுகிறது". என்று கூறினார்.[2]
வெளியீடும் வரவேற்பும்
தொகுகாணி நிலம் 1987 ஆகத்து 14 அன்று வெளியானது.[3] கல்கியின் ஜெயமன்மதன் புதுமையான கோணங்கள், நேர்த்தியான படத்தொகுப்புகள், நேர்த்தியான இயக்கமும் இல்லை என்று எழுதி படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தைக் கொடுத்தார்.[4] இத்திரைப்படம் பின்னர் பான் ஆப்ரிக்கன் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kaani Nilam (1988)". British Film Institute. Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
- ↑ Venkatramani, S.H. (15 December 1986). "Kani Nilam Vendum: Censor Board finally clears film on political corruption". இந்தியா டுடே. Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 12 December 2022.
- ↑ "Kaani Nilam ( 1987 )". Cinesouth. Archived from the original on 9 September 2004. பார்க்கப்பட்ட நாள் 12 December 2022.
- ↑ ஜெயமன்மதன் (13 September 1987). "காணி நிலம்". கல்கி. Archived from the original on 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
- ↑ "Kaani Nilam for Africa". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 24 February 1989. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890224&printsec=frontpage&hl=en.