முடிஞ்சா இவன புடி (திரைப்படம்)
முடிஞ்சா இவன புடி (Mudinja Ivana Pudi) கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2016 ல் தமிழ் மொழியில் வெளிவந்த படமாகும்..[2] ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் எம். பாபு இப்படத்தைத் தயாரித்துள்ளனர். கன்னட மொழியில் "கொட்டிகொப்பா" என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது. சுதீப் மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இந்த படத்தின் இரு பதிப்புகளும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு வரலட்சுமி விரத நாளில் வெளியிடப்பட்டது. பின்னர் இது தெலுங்கு மொழியில் 'கொட்டிகொக்கடு' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[4]
முடிஞ்சா இவன புடி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் எம்.பி.பாபு |
திரைக்கதை | கதை டி.சிவகுமார். |
இசை | டி.இமான் |
நடிப்பு | சுதீப் நித்யா மேனன் |
ஒளிப்பதிவு | ராஜரதிதினம் |
படத்தொகுப்பு | பிரவேன் ஆன்டனி |
கலையகம் |
|
வெளியீடு | 12 ஆகத்து 2016 |
ஓட்டம் | இரண்டு மணி நேரம் 26 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹125-135 கோடிகள்[1] |
கதைச் சுருக்கம்
தொகுஇத் திரைப்படம் ஒரே நபர் நல்லவராகவும், மோசமானவரகவும் இருவித வேடங்களில் தோன்றி நடித்த படமாகும். சத்யா (சுதீப்) என்ற இளைஞன் நிலங்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறான். சுபா (நித்திய மேனன்) என்பவள் அங்கே அவனுக்கு உதவி புரிந்து வரும் மேலாளராகப் பணிபுரிகிறார். அவள் நல்ல எண்ணங்களைக் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். சுதீப் பணக்கார வியாபாரிகளிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை அவர்களிடமிருந்து கொள்ளையடித்து வாழும் இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். அவனது தந்தை (பிரகாஷ் ராஜ்) மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பது அவனது கனவாகும். மேலும் ஆடம்பரமான ஒரு வாழ்க்கையைத் தான் வாழவேண்டும் எனவும் விலையுயர்ந்த ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற மகிழுந்தில் பயணிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டும் இவ்விதமான திருட்டுகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு அடிக்கடி நடக்கும் திருட்டுகளையெல்லாம் செய்வது தன்னைப் போலவே உள்ள மோசமான நடத்தைகளைக் கொண்ட சிவாதான் எனக் காவல் துறை மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களை நம்ப வைக்கிறான்.
இதற்கிடையே முகேஷ் திவாரி மற்றும் சரத் லோகித்ச்வாலா என்ற மிகப்பெரிய பணக்காரர்களிடமிருந்து பணத்தை சத்யா கொள்ளையடிக்கிறான். இந்த திருட்டு வழக்கை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஊழலில் திளைத்த கிஷோர் (பி.ரவிஷங்கர்) என்ற உதவி ஆணையர் சத்யாவை எப்படியாவது பிடித்து அந்தப் பணத்தைத் தான் அடைய விரும்புகிறான். இதற்கிடையில், சத்யா சுபாவுடன் காதலில் விழுகிறான். மேலும் நடக்கும் குற்றங்களுக்கெல்லாம் சிவாதான் காரணமென காவல் துறைக்குத் தகவல் அளிக்கின்றான். சிவாவும் சத்யாவும் ஒரே நபராகத்தான் இருக்க வேண்டுமென கிஷோர் சந்தேகமடைகிறான், ஆனால் அதை நிரூபிக்க அவனிடமும் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.
நடிகர்கள்
தொகு- சுதீப் - சத்யா மற்றும் சிவா
- நித்யா மேனன் - சுபாஷினி
- முகேஷ் திவாரி - பணக்காரன் 1
- சரத் லோகித்ச்வா - பணக்காரன் 2
- பி. ரவிஷங்கர் - கிஷோர்
- பிரகாஷ் ராஜ் - சத்யாவின் தந்தை
- நாசர் - காவல் துறை உயர் அலுவலர்
- சதீஸ் - சதீஷ்
- அவினாஷ் - நில உரிமையாளர்
- அச்யுத் குமார் - சுபாவின் சகோதரர்
- லதா ராவ் - சுபாவின் அண்ணி
- அஜய் ரத்னம் - காவல் அதிகாரி
- டெல்லி கணேஷ் - அனாதை இல்லம் நடத்துபவர்
- இமான் அண்ணாச்சி
வெளியீடு
தொகுஇப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முடிவடைந்தது. ஜூன் மாத தொடக்கத்தில், மற்ற வேலைகள் தயாரிப்பு நிலையில் இருந்தது. ஜூலை மாதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தை வெளியிட திட்டமிட்டனர். அச்சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி திரைப்படம் வெளிவந்ததால், தங்கள் படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டனர். இந்தியா மற்றும் பிற நாடுகளில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட பதிப்புகள் 1000 திரையரங்குகளுக்கும் மேலாக வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.[5] இத் திரைப்படத்தின் இசை ஜூலை 20 ல் வெளியிடப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் தனுஷ், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இசை
தொகுடி.இமான் இப்படதின் இசையமைப்பு மற்றும் ஒலிப்பதிவை மேற்கொண்டார். நடிகர் சுதீப் மற்றும் நடிகை நித்யா மேனன் கன்னட மொழியில் வி.நாகேந்திர பிரசாத் எழுதிய பாடலை பாடியுள்ளனர்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SUDEEP'S 'KOTIGOBBA-2' TO RELEASE ACROSS INDIA". bangaloremirror.indiatimes.com.
- ↑ "Kotigobba 2 is KS Ravikumar Sudeep movie title". moviemint.com. பார்க்கப்பட்ட நாள் 2 September 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kotigobba-2 Tamil title finalized". ytalkies.com. Archived from the original on 23 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 August 2015.
- ↑ "Kotigobba 2 Release On Varmahalakshmi Festival". Chitraloka. 18 July 2016.
- ↑ "Sudeep-nithya sing for Kotigobba 2". The New Indian Express.
- ↑ Sharadhaa, A (14 June 2016). "Sudeep-nithya sing for Kotigobba 2". The New Indian Express.