மிதுன் சக்கரவர்த்தி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
மிதுன் சக்ரவர்த்தி (பிறப்பு : கௌரங்க சக்ரவர்த்தி, 16- ஜூன் 1952) என்பவர் தேசிய திரைப்பட விருது வென்ற இந்திய திரைப்பட நடிகர், சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவர் ஆவார். சக்கரவர்த்தி அறிமுக நடிகராக மிருணாள் சென்னின் மிரிகயா (1976) படத்தில் நடிக்கத் துவங்கினார். அறிமுகப் படத்திலேயே இவர் சிறந்த நடிகருக்கான சிறந்த தேசிய விருதைப் பெற்றார். 1980-களில் இவர் உச்ச நிலையில் இருந்த தருணங்களில் சிறப்பாக நடனமாடும் நாயகனாக விளங்கி மிகுதியான ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் மூலம் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். குறிப்பாக 1982- ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற டிஸ்கோ டான்சர் படத்தில் ஜிம்மி என்ற தெரு ஆட்டக்காரராக நடித்த பாத்திரத்தின் மூலம் சிறப்பாக அடையாளம் காணப்பட்டார்.
மிதுன் சக்ரவர்த்தி | |
---|---|
இயற் பெயர் | கௌரங்க சக்ரவர்த்தி |
பிறப்பு | சூன் 16, 1950 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
வேறு பெயர் | மிதுண்டா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1976–தற்போதுவரை |
துணைவர் | யோகீதா பாலி (1982-தற்போதுவரை) |
சக்கரவர்த்தி மொத்தமாக 350 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அதே சமயம் அதிக எண்ணிக்கையில் வங்காள மொழி, ஒரியா, போஜ்பூரி திரைப்படங்களிலும் ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் தோன்றியுள்ளார். மேலும் மிதுன் மோனர்ச் குழும நிறுவனங்களைச் சொந்தமாக நடத்தினார். இது விருந்தோம்பல் துறையில் நாட்டம் கொண்டதாக இருந்தது.[1]
வாழ்க்கை வரலாறு
தொகுசொந்த வாழ்க்கை
தொகுஇவர் அன்றைய கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா வங்காளி குடும்பத்தில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பெயர் பெற்ற ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார். இங்கு இவர் தன்னுடைய வேதியலில் பட்டபடிப்பை (பிஎஸ்சி) முடித்தார். அதற்கு பிறகு புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார்.
திரைப்பட தொழிலுக்குள் நுழைவதற்கு முன் மிதுன் நக்சலைட்டு குழுவில் இணைந்தவராக இருந்தார். இவருடைய ஒரே சகோதரர் விபத்தில் சிக்கி மரணத்தார். மிகவும் துயர நிகழ்வாக இவருடைய குடும்பத்தை இது பாதித்தது. இதனால் நகசல் குழுவில் இருந்து விலகி, தன்னுடைய குடும்பத்திற்கு திரும்பினார். இவருடைய வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையானது. மற்றும் இவருடைய நிலையான அடையாளத்திற்கு வழிவகுக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆனது. மற்றொரு அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால் இவர் வீர விளையாட்டுகளில் மிகவும் நல்ல பயிற்சிபெற்றவர்.
இந்திய நடிகையான யோகிதா பாலியை மிதுன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு குழந்தைகள், அதில் மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் மைமோ சக்கரவர்த்தி பாலிவுட்டில் ஒரு நடிகராக இருப்பவர். இவர் 2008- ஆம் ஆண்டய திரைப்படமான ஜிம்மி யில் அறிமுகம் ஆனார். இவருடைய இரண்டாவது மகன் ரைமோமோ சக்ரவர்த்தி, பிர் கபி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் மிதுனுடைய மற்ற இரண்டு குழந்தைகளான நமாஷி சக்ரவர்த்தி மற்றும் திஷாணி சக்ரவர்த்தி ஆகியவர்கள் படித்து வருகிறார்கள்.
இவர் 1986 முதல் 1987 வரை நடிகை ஸ்ரீ தேவியோடு உறவுகொண்டு இருந்தார் என்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இவர் தன் முதல் மனைவியான யோகிதா பாலியை விவாகரத்து செய்யாததால் இவருடனான உறவை ஸ்ரீதேவி முறித்துக் கொண்டார். சக்ரவர்த்தி மற்றும் ஸ்ரீ தேவி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக நம்பப்பட்டது. என்றாலும் பிற்காலத்தில் இந்த இணைவு சட்டப்படி செல்லாது என அறிவிக்கபட்டது.[2]
திரைப்படத் தொழில்
தொகுமிதுன் 1976-ஆம் ஆண்டில் அறிமகமான மிருணாள் சென் இயக்கிய மிரிகயா படத்தில் நடித்ததிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இதன் பிறகு இவர் சில துணை கதாபத்திரங்களில் நடித்தார் அதாவது, தோ அன்ஜானே (1976) மற்றும் பூல் கிலே குல்ஷன் குல்ஷன் ( 1997) போன்ற படங்களாகும். இவற்றின் மூலம் இவர் எந்த அங்கீகாரத்தையும் பெற இயலவில்லை. இந்நிலையில் தமிழில் வெளிவந்து பெருவெற்றியை ஈட்டிய ஆட்டுக்கார அலமேலு படத்தின் இந்தி மறு ஆக்கமான மேரா ரக்ஷக் (1978) படமானது மிதுனின் வாழ்கையில் வெற்றிக் கண்ணக்கைத் துவக்கியது. இவ்வாறு 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இவர் நடித்த குறைந்த பட்ஜெட் திரைபடமான ரவிகாந்த் நகைச் இயக்கிய சுரக்ஷா (1979) மற்றும் 1980 களின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றியை தந்த படங்களான ஹம் பாஞ்ச (1980) மற்றும் வர்தாத் (1981) போன்ற படங்கலில் வெற்றிகரமாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கத்துவங்கினார்.
கடைசியாக இசை நாடகத் திரைப்படமான டிஸ்கோ டான்சர் (1982) திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியானது மிதுனை புகழின் உச்சியில் கொண்டுவந்து சேர்த்தது. இப்படத்தின் இசையின் காரணத்தால் இந்நாள் வரையிலும் இப்படமானது கலாச்சார விரும்பும்படியாக தொடரந்து இருந்து வருகின்றது. இந்த திரைபடத்தைத் தொடர்ந்து வந்த மிதுனின் இசை சம்மந்தபட்ட படங்களான கசம் பைதா கர்னே வாலே கி (1984) மற்றும் டான்ஸ் டான்ஸ் ( 1987 ) படங்கள் இவர் ஒரு திறமைமிக்க நடனர் என நிறுபித்தன.
மேலும் இவர் 1980-ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் குடும்ப நாடகப் படங்கள் மற்றும் காதல் படங்களில் மிகுதியாக நடித்தார். இவற்றில் குறிப்பிடத்தக்கவை முஜெ இன்சாப் சாஹி யே ( 1983) பியார் ஜூக்தா நஹி (1985) சுவர்க் சே சுந்தர் (1986), பியார் கா மந்திர் (1988) ஆகும். தொடர்ந்து இவருடைய படங்கள் வணிகரீதியான வெற்றியை ஈட்டிய படங்களாக இன்றளவிலும் இருந்து வருகின்றன. [3]
இவர் ஒரு வெற்றிகரமான நடி்கர் என வாண்டட் (1983), பாக்சர் ( 1984), ஜாகீர் (1984), ஜால் (1986), வடன் கே ரக்வாலே (1987), கமாண்டோ (1988), வக்த் கி ஆவாஸ் (1988), குரு (1989), முஜ்ரீம் (1989), துஷ்மன் (1990) ஆகியவைகளால் வாகை சூடிய படங்களால் அடையாளம் காணப்பட்டார். 1980-ஆம் ஆண்டுகளின் இடைப்பட்டதில் இவர் அமிதாப் பச்சனுக்கு போட்டியாளர் என கருதப்பட்டடார். இவர் டஜன் கணக்கான திரைப் படங்களில் அதிரடி படங்களில் பொதுவாக நடித்ததுள்ளார். இப்படங்களில் இவர் சமூகத் தீமைகள் மற்றும் அனியாயத்தை எதிர்க்கும் கோபக்கார இளைஞராக தன்னை காட்டிக்கொண்டார். இந்த சிறப்பு தன்மையானது அமிதாப் பச்சனைப் போல இருந்தது. இவருடைய காலத்தின் மிகப்பெரிய சில நடிகைகளுடன் இவர் நடித்திருக்கிறார் மற்றும் பாலிவுட்டில் பொதுவாக ஜீனத் அம்மன், பத்மினி கோலாப்பூரி, ரதி அக்னிஹோத்ரி, ரேகா, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் மற்றும் பலருடன் நடித்திருக்கிறார்.
மிதுன் வியாபார ரீதியாக வெற்றியைத்தந்த திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல். பேரளவிளான விமர்சனை ரீதியாக போற்றுதலையும் பெறத்தக்க வங்கத் திரைப்படங்களிலும் நடித்தார். இவற்றில் மிரிகயா, தகதேர் காதா, சுவாமி விவேகானந்தா ஆகியவைகளுக்காக மிகவும் பாராட்டுதலையும் மற்றும் தேசிய திரைப்பட விருதுகளையும் இவர் வென்றார். மேலும் இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார். இவருடைய நடிப்பு திறமை 1990-ல் வெளிவந்த அக்னீபத் திற்காக பிலிம்பேர் சிறந்த சிறப்பு நடிகருக்கான விருதை வென்றார். மற்றும் இவருடைய நடிப்புத்திறமை ஜல்லாத் படத்திற்காக பிலிம்பேர் சிறந்த எதிர்நாயகன் என்பதற்காக விருதை' வென்றார். இது தவிர, பியார் க மந்திர் (1988) மற்றும் முஜ்ரிம் (1989) போன்ற திரைப்படங்களில் இவருடைய நடிப்புத் திறமைக்காக புகழப்பட்டார்.
இவர் 1990 களின் துவக்கத்தில் மும்பையிலிருந்து இருந்து தன் வசிப்பிடத்தை உதகமண்டலத்துக்கு மாற்றிக்கொண்டார். இங்கு இவர் தன்னுடைய தங்கும் விடுதி வணிகத்தை கவணிக்கத் துவங்கினார். மேலும் மெய்யாகவே பத்தாண்டுகளுக்கு இவர் "தொழிலதிபர்" என ஆனார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக 80 க்கும் மேற்பட்ட திரை படங்களில் நடித்திருகிறார். இவர் தன்னுடைய முதனமை நோக்கு இந்தி திரைப்படத்துறை என்பதில் இருந்து மாற்றிக் கொண்டு குறைந்த பட்ஜெட்டிலான "பீ"கிரேட் படங்களில் நடிக்கத் துவங்கினார். முக்கியமாக இந்தப் படங்களெல்லாம் மத்திய பிரதேசம் மற்றும் பீகாரின் பார்வையாளர்களை திருப்திப்படும்படியாக தயாரிக்கப்பட்டும், இந்த இடங்களில் இருக்கும் கலாச்சாரத்தை பின்பற்றுபவராக இன்றளவிலும் மிதுன் இருக்கிறார். 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக இந்தியாவில் அதிகமான வருமான வரி செலுத்துபவராக இவர் இருந்து வருகிறார்.
2005-ஆம் ஆண்டில் இவர் மீண்டும் முக்கிய தொழிலான இந்தி திரைப்படத் தொழிலுக்கு ஏலான் என்ற திரைப்படத்தின் மூலம் திரும்பினார். ஆனால் இது வெற்றியை அளிக்கவில்லை. 2005- பிறகு சில துணை கதாப்பாத்திரங்கள்ளில் நடிக்கத் துவங்கினார். இப்படி நடித்த திரைப்படங்களில் ஒன்றான கல்பனா லாஸ்மியின் சிங்காரி (2005) இவருடைய நடிப்புத் திறமைக்காக போற்றப்பட்டார். Lucky: No Time for Love 2007-ஆம் ஆண்டில் மணிரத்தினத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தந்த குரு திரைப்படத்தில் இவருடைய நடிப்பிற்காக மிகவும் விமர்சனை முறையிலான போற்றுதலைப் பெற்றார். இவர் நடிப்பதற்கு திரும்பி வந்ததிலிருந்து குரு திரைபடம், வியாபார ரீதியிலான வெற்றியை தந்த இவருடைய முதல் படமாகும். 2008-ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த பெங்காளி மற்றும் போஜ்புரி மொழி உள்ளிட்ட 9 திரைபடங்களை உள்ளடங்கியதாக மிதுன் கொண்டிருந்தார். டான் முத்து சுவாமி-யில் கதாநாயகனாக இவர் நடித்திருந்தது மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இவருடைய நகைச்சுவை நடிப்பு மிகவும் பாராட்டும் விதமாக இதில் இருந்தது. 2009-ஆம் ஆண்டு இவருடைய ஜோர் லகா கே ... ஹைய்யா!விற்காக பல சர்வேதேச விருதுகளை வென்றார்.[4] இவருடைய ஜிந்தகி தேரே நாம் , மேலும் அதே போல சல்மான் கானோடு நடித்த வீர்,, ராக் மற்றும் கன்னடத்தில் நடித்த மாணிக்யா ஆகிய திரைப்படங்கள் வெளிவரவேண்டியவை ஆகும். மிதுன்தாஸின் அண்மையில் வெளிவந்த சோஹம் ஷா இயக்கிய லக் , இதில் சஞ்சய் தத் ஆரம்பத்தில் நல்ல வரவேற்புடனும் சராசரியான வருமானம் பெற்றது. இதில் மிதுன் நடித்து இருந்தார் மற்றும் சால் சலேன் இதனுடைய அழுத்தமான கருத்துக்காக விமர்சனரீதியாக போற்றப்பட்டது. அண்மையில் திரையிடப்பட்ட இவருடைய பாபர் திரைப்படம் வட இந்தியாவில் ஒரே இடத்தில திரையிட்டு நன்றாக ஓடியது. செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில், இவருடன் டிம்பில் கபாடியா நடித்த பிர் கபி திரைப்படம் நேரிடையாக வீட்டிற்கு (DTH) மூலம் திரையிடப்பட்டது.
இவர் பாலிவுட் திரைப்படங்களுக்கு தொழிலுக்கு இணையாக, தன்னுடைய தாய் மொழியான பெங்காளி திரைப்படங்களில் வரிசையாக வெற்றிப்படம் மற்றும் வெற்றியில்லாத படங்களில் நடித்துள்ளார். கலைபடைப்புகளில் அல்லது யதார்த்த படங்களில் இவருடைய நடிப்புத் திறமை வெளிப்பட்டது. அதற்காக சில விருதுகளும், போற்றுதல்களும் பெற்றார். 1992-ஆம் ஆண்டில் தயாரான ட்ராயி -ல் தேபாஸ்ரீ ராய் மற்றும் அனில் சாட்டர்ஜியுடன் நடித்து ஒரு மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் தந்தது. பாம்பாய்க்கு சென்ற பிறகு, இந்தி திரைப்படங்களில் வெகுஜன போக்கு நட்சத்திரமாக புகழ் பெற்றதில், மிதுனுடைய தோற்றங்களில் சிறிது இடைவெளியானது, ஆனால் இவர் 1992-ஆம் ஆண்டு தொடர்ந்து கலைநயமான திரைப்படங்களான சிறப்பு பெற்ற இயக்குநரான புத்ததேப் தாஸ்குப்தாவினுடைய தஹதேர் காத்தா வில் நடித்தார். இதற்காக 1993-ஆம் ஆண்டு இவர் இரண்டாவதாக தேசிய விருது பெற்றார். இதை தொடர்ந்து 1995-ஆம் ஆண்டு ஜீ.வி. ஐயருடைய சுவாமி விவேகானந்தா வில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பாத்திரத்தில் இவர் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 1999-ஆம் ஆண்டு கௌதம் கோஷ் குடியா -வில் நடித்ததற்காக இவர் மேலும் போற்றப்பட்டார். மேலும் இவர் 2002-ஆம் ஆண்டு தித்லி யில் நடித்து வியாபார ரீதியிலான பாராட்டைப்பெற்றார். ரிதுபர்னோ கோஷ்-ஷில் தோன்றியதற்காக விமர்சனையாக மற்றும் வியாபார ரீதியிலான பாராட்டுதலை பெற்றார். நிஜ வாழ்க்கையில் தாய்-மகள் ஜோடியாக இருப்பவர்களான அபர்னா சென் மற்றும் கொன்கனா சென் ஷர்மாவோடு இவர் நடித்திருந்தார். அண்மையில், மேற்கு வங்காளத்தில், பாபுலர் என்டெர்டெயினர்சின் பதகேஷ்டோ தொடர் நாடகங்களில் நடித்தது, பரவலான வெற்றியைத் தந்தது. 2008-ஆம் ஆண்டில் இவர் ராகுல் போஸ் மற்றும் சமீரா ரெட்டியோடு நடிப்பதற்கு தாஸ்குப்தாவோடு மறுபடியும் கூட்டினைந்து கால் புருஷ் -ஷிற்காக விமர்சையாக போற்றப்பட்டார்.
தொலைக்காட்சி பொழுதுபோக்கு
தொகுஜீ தொலைகாட்சியில் பொழுது போக்கு காட்சியாக டான்ஸ் இந்திய டான்ஸ் மற்றும் டான்ஸ் பெங்காள் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு நீதிபதியாக மிதுன் இருக்கிறார்.
விளையாட்டுகள்
தொகுமேலும் தன்னுடைய பூர்விகமான பெங்காளத்தில் கால்பந்தாட்டம் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்பவராக மிதுன் சக்கரவர்த்தி இருக்கிறார். இந்த பெங்காள் கால் பந்தாட்டம் அகாடமி இவருடைய சொந்தக் கருத்தாகும்.மிதுன் இந்த கால்பந்தாட்டக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தேவையான தொகையை திரட்டினார்.
மேலும் மிதுன் சக்கரவர்த்தி இந்தியக் கிரிக்கெட் லீக்கின் மட்டைப்பந்து குழுவான ராயல் பெங்காள் டைகர்ஸ் உடைய கூட்டு உரிமையாளர் ஆவார்.[5]
விருதுகள்
தொகுதேசிய சினிமா விருதுகள்
தொகு- 1977- மிரிகயா விற்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுகள்
- 1993- தஹாதேர் கதாவிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுகள்
- 1996- சுவாமி விவேகானந்தா விற்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்
தொகு- 1990-அக்னீபத் திற்கான சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள்
- 1995- ஜல்லாத் திற்காகசிறந்த எதிர்நாயகனுக்கான பிலிம்பேர் விருது
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
தொகு- 1995- ஜல்லாத் திற்காக சிறந்த ஸ்டார் ஸ்க்ரீன விருது
ஸ்டார் டஸ்ட் விருதுகள்
தொகு- 2007-வாழ்நாள் சாதனைக்காக ஸ்டார்டஸ்ட் விருது[1]
- 2007-வருடத்தின் காதபாத்திரம் முன் மாதிரி-க்கான விருது[2]
பெங்காளி திரைப்பட பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு விருதுகள்
தொகு- 1977 - மிரிகயா விற்கான பிஎப்ஜெஎ சிறந்த நடிகருக்கான விருது[3] பரணிடப்பட்டது 2009-06-16 at the வந்தவழி இயந்திரம்
- 1995-தஹதேர் கதா க்கான பிஎப்ஜெஎ சிறந்த நடிகருக்கான விருதுகள்[4] பரணிடப்பட்டது 2009-06-16 at the வந்தவழி இயந்திரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட வரலாறு
தொகு- மிரிகயா (1976) - கிநுஅ
- தோ அன்ஜானே (1976) - கான்டி
- சுரக்ஸா (1979) - கன்மாஸ்ட்டர்
- தரனா (1979)
- ஹம் பாஞ்ச் (1980) - பீமா
- ஸ்ஹௌகின் (1981) - ரவி ஆனந்த்
- வர்தாத் (1981) - கன்மாஸ்ட்டர்
- ஆதத் சே மஜ்பூர் (1981) - அபுர்பா கிஷோர் பிர்
- டிஸ்கோ டான்சர் (1982) - அணில்
- முஜே இன்சாப் சாஹியே (1983)
- கசம் பைதா கரனே வாலே கி (1984)
- பியார் ஜுக்தா நஹின் (1985)
- குலாமி(1985)
- டான்ஸ் டான்ஸ் (1987) - ராமு
- பியார் கா மந்திர் (1988) - விஜய்
- வகத் கி ஆவாஸ் (1988)
- ஜீதே ஹைன் ஷான் சே (1988) - ஜோஹ்ன்னி
- துஷ்மன் (1990) (1990) - ராகேஷ்
- அக்னீபத் (1990) - கிருஷ்ணன் ஐயர்
- தில் ஆஷ்னா ஹை (1992) - சுனில்
- தலால் (1993)
- தடிபார் (1993)
- பூல் அவுர் அங்கார் (1993)
- ஜல்லாத் (1995) - அமவாஸ்
- Ravan Raaj: A True Story - எசிபீ அர்ஜுன் வர்மா
- லோஹா (1997) - அர்ஜுன்
- சஹாரா ஜலூச்சி (ஒரியா) (1998)
- யம்ராஜ் (1998) - பிர்ஜு
- குண்டா (1998) - ஷங்கர்
- தித்லி (2002) - ரோஹித் ரோய்
- ஏலான் (2005) - பாபா சிகந்தர்
- Lucky: No Time for Love (2005) - தாஸ் கபூர்
- ' சிங்காரி/0} (2006) - புவான் பண்டா
- தில் தியா ஹாய் (2006)
- குரு (2007) - மணிக்தாஸ் குப்தா
- ஹாசன் ராஜா (2007) - ருஹுல் அமின்
- மை நேம் இஸ் அந்தோணி கோன்சல்வேஸ் (2008)
- போலே ஷங்கர் (2008) - ஷங்கர் - போஜ்புரி
- ஹீரோஸ் (2008) - டாக்டர். நக்வி
- சாந்தணி சௌக் டூ சீனா (2008) - தாதா
- சி கே கோம்பனி (2008)
- லக் (2009)
- பாபர் (2009)
- வீர் (2009)
- நோபல் சோர் (2012)
- லே ஹலவா லே (2012)
- யாகாவாராயினும் நா காக்க (2015)
குறிப்புகள்
தொகு- ↑ டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள்
- ↑ "The Truth About Mithun and Sridevi". Stardust (Stardust International). May 1990.
- ↑ "boxofficeindia.com". Career's biggest hits. Archived from the original on 20 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2008.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Zor Lagaa Ke... Haiya Movie Preview". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 15 Sept., 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தி டெலிகிராப், இந்தியா - மிதுன்: ஷாருக்குடன் எந்த மோதலும் இல்லை". Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.