மூன்றாம் பிறை (திரைப்படம்)

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மூன்றாம் பிறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மூன்றாம் பிறை (Moondram Pirai) 1982ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.[1]

மூன்றாம் பிறை
இயக்கம்பாலுமகேந்திரா
தயாரிப்புடி. ஜி. தியாகராஜன்
ஜி. சரவணன்
கதைபாலுமகேந்திரா
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
சில்க் ஸ்மிதா
ஒய். ஜி. மகேந்திரன்
ஒளிப்பதிவுபாலுமகேந்திரா
படத்தொகுப்புடி. வாசு
கலையகம்சத்ய ஜோதி படங்கள்
விநியோகம்சத்ய ஜோதி படங்கள்
வெளியீடு19 பெப்ரவரி 1982 (1982-02-19)
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 330 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடிய காதல்படம்மாகும்.[2] 1983 ஆண்டில் இத்திரைப்படத்தை பாலுமகேந்திரா அவர்கள் இந்தி மொழியிலும் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 'சந்மா' எனும் பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணியாற்றி கடைசி திரைப்படம் இதுவாகும். "கண்ணே கலைமானே" எனும் பாடல் தான் அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடைசி பாடலாகும்.

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட சீனுவாசன் (கமல்ஹாசன்) எனும் ஆசிரியர் அவளைக் காப்பாற்றி தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாக்கிறார். பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். நாளடைவில் விஜி மீது காதல் கொள்கிறார் சீனுவாசன். விஜியைக் காணாமல் அவளது பெற்றோர் காவல்துறையினர் உதவியோடு தேடுகின்றனர். இந்நிலையில் சீனு விஜியின் மனநோய்தீர தமக்கு தெரிந்த வைத்தியர் மூலம் குணப்படுத்த முயல்கிறார். வைத்தியர் நோய் குணமாக சில நாட்கள் ஆகும் எனக் கூறி சிறிது சிறிதாக விஜியை குணப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜி சீனுவிடத்தில் இருப்பதை அறியும் பெற்றோர் அவளை அழைத்துப் போக வருகின்றனர். விஜியின் மனநோய் குணமாகிறது. அப்போது விஜியை அழைத்து செல்ல வரும் விஜியின் தாயிடம் 'விஜிக்கு மனநோய் பீடித்தது குறித்தும் பின் குணமானது குறித்தும் விஜிக்குத் தெரிந்தால் மனோரீதியான பிரச்சனைகள் விழையலாம்' என வைத்தியர் அறிவுறுத்துகிறார். விஜியை அழைத்துக் கொண்டு இரயிலில் அமர்கிறார் தாய். அப்போது விஜி அழைத்துச் செல்லப்படும் செய்தி கேள்விப்பட்டு இரயில் நிலையம் வரும் சீனு, இரயில் பெட்டியில் அமர்ந்திருக்கும் விஜியிடம் தனக்கும் விஜிக்கும் இருந்த சில விஷயங்களை சில செய்கைகள் மூலம் உணர்த்த முயல, அதை ஏதோ ஒரு பைத்தியத்தின் செய்கைகள் என எண்ணுகிறாள் விஜி. மன நோயின் பாதிப்பு இல்லாமல் போனபின் ரயில் நிலையத்தில் சீனு விஜியிடம் பேச பல முயற்சிகள் செய்தும் அவரால் பேச முடியாது போகவே விஜியும் அவரைப் பைத்தியக்காரன் என்று பார்வையிடவும் இரயிலும் புறப்பட்டுச் செல்லவும் திரைக்கதை முடிவு பெறுகின்றது [3].

நடிகர்கள்

தொகு

ஸ்ரீதேவியின் பாத்திர சிறப்பு

தொகு

உண்மையில் இக்கதையில் ஸ்ரீதேவியின் உண்மையான கதாபாத்திரப் பெயர் பாக்யா என்ற பாக்கிய லட்சுமி ஆகும். ஆனால், விபத்திற்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டதால் இவளது உண்மைப் பெயர் தெரியாத காரணத்தால் விஜி என்று அழைக்கப்படுகிறாள். அதனால்தான்,மனநலம் குணமானபின், சீனுவால் "விஜி" என்றழைக்கப்பட்டபோது அது வேறு யாரோ என நினைத்துக் கொள்கிறாள் குணமான பாக்கியா.[3]

பாடல்கள்

தொகு
மூன்றாம் பிறை
ஒலிப்பதிவு
வெளியீடு1982
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 கண்ணே கலைமானே கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:13
2 கண்ணே கலைமானே (சோகம்) கே. ஜே. யேசுதாஸ் 01:09
3 நரி கதை கமல்ஹாசன், ஸ்ரீதேவி வைரமுத்து 04:05
4 பொன்மேனி உருகுதே எஸ். ஜானகி கங்கை அமரன் 04:35
5 பூங்காற்று கே. ஜே. யேசுதாஸ் கண்ணதாசன் 04:22
6 வானெங்கும் தங்க எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:34

நரிக்கதை பாடல்

தொகு

சீனுவிடம் விஜி கதை சொல்லக் கேட்க சீனு இந்த நரிக்கதையைப் பாடலாகப் பாடுகிறான். முன்பொரு காலத்தில் நரி ஒன்று சாயத்தொட்டி ஒன்றில் தவறி விழுந்ததால் தனது சொந்த நிறம் மாறி நீலநிறமாகி விடுகிறது. காட்டில் உள்ள மற்றற விலங்குகள் நீலநரியை புது மிருகம் எண்ணி அஞ்ச, அனைத்து விலங்குகளையும் பயமுறுத்தி அரசாட்சி அதிகாரம் செய்கிறது நரி. ஒருநாள் மழையில் நனையும் நரியின் நீலச்சாயம் கரைகிறது. நரியின் உண்மை உருவம் வெளிப்பட மற்ற விலங்குகள் நரியைக் காட்டைவிட்டு விரட்டுகின்றன [3] .

விருதுகள்

தொகு
விருது விழா வகை வேட்பாளர் முடிவு மேற்.
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா 30வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சிறந்த நடிகர் கமல்ஹாசன் வெற்றி
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 28வது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பாலுமகேந்திரா வெற்றி
தமிழக அரசு திரைப்பட விருதுகள் 1982ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு விருது வழங்கும் விழா சிறந்த திரைப்படம் (மூன்றாம் பரிசு) மூன்றாம் பிறை வெற்றி
சிறந்த நடிகர் கமல்ஹாசன் வெற்றி
சிறந்த நடகை ஸ்ரீதேவி வெற்றி
சிறந்த பாடகர் (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் வெற்றி
சிறந்த பாடகர் (பெண்) எஸ். ஜானகி வெற்றி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு