சத்ய ஜோதி படங்கள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1980 ஆம் ஆண்டு 'ஜி. தியாகராசன்' மற்றும் 'ஜி. சரவணன்' என்பவர்களால் நிறுவப்பட்டது.

சத்ய ஜோதி படங்கள்
வகைதிரைப்படத் தயாரிப்பும், வெளியீடும்
நிறுவுகை1977
நிறுவனர்(கள்)ஜி. தியாகராசன்
ஜி. சரவணன்
தொழில்துறைதிரைப்படத்துறையும்,. தொலைக்காட்சியும்
இணையத்தளம்http://www.sathyajyothifilms.com/

நோக்கம் தொகு

எங்கள் நிறுவனம் மூலம் நாங்கள் பல்வேறு படங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். ஒவ்வொருக் கால கட்டத்திலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப, சிறந்தக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்கள் வழங்கி வருவது என்பது எங்களது நிறுவனத்தாரின் கோட்பாடாக இருந்து வருகிறது

- டீ. ஜீ. தியாகராஜன்

2018 ஆம் ஆண்டு சூலை மாதம், இந்நிறுவனத்தின் 32வது திட்டவெளியீட்டை அறிவித்தது. இப்படத்திற்கான பூசை, சூலை மாதம் 6 தேதி, சென்னையில் போடப்பட்டது. அதன்படி, நடிகர் அஜித் குமார், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில், விசுவாசம் (திரைப்படம்) நடிக்கிறார்.[1] இது 'தல' என்று அழைக்கப்படும் அஜீத்தின் 57வது படமாகும்.[2][3] இப்படத்திற்கான இசையமைப்பாளர், அனிருத் ஆவார். மேலும், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்புக்கும், இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆகியிருக்கின்றனர், இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் வெளியான, விவேகம் (திரைப்படம்) என்பதும், இந்த நிறுவனத்தால், இயக்குநர் சிவா இயக்கி, அஜித்குமார் நடித்தது குறிப்பிடத் தகுந்த நிகழ்வு ஆகும்.[4][5] .

இந்நிறுவனத் தோற்றம் தொகு

சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனமானது, 1970 ஆம் ஆண்டு என்பவரால் டீ. ஜி. தியாகராசன் அடித்தளமிடப் பட்டது. தியாகராசன், எம்.பி. ஏ. பட்டம் பெற்று அமெரிக்காவில் வசித்து வந்தவர் ஆவார். இவரது தந்தை காலஞ்சென்ற வீனஸ் டீ. கோவிந்தராசன் ஆவார். இவரது தந்தையும், வீன்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வழியாக 1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கி 1980 ஆம் ஆண்டுகள் வரை, திரைப்படங்கள் தயாரித்தார். தொடகத்தில் 1970 ஆம் ஆண்டுகளில், தியாகராசன் சத்யா மூவிஸ் நிறுவனத்தில், திரைப்படம் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றினார். தமிழக அமைச்சருள் ஒருவராய் இருந்த இராம. வீரப்பன் அவர்களின் பட நிறுவனமான சத்யா மூவிஸ் என்பதும், இராம. வீரப்பன் இவரது மாமனார் (மனைவியின் தந்தை) என்பது குறிப்பிடத் தகுந்த சமூக அடையாளம் ஆகும்.[6][7] இத்தகைய அனுபவங்களும், கற்றல்களும், இந்திறுவனத்தினை, தொடர் வெற்றிப் பாதையில் இட்டு செல்வாதாகக் கொள்ளலாம்.

வெளியிட்டத் திரைப்படங்கள் தொகு

வருடம் திரைப்படம் இயக்குநர் நடிப்பு குறிப்புகள்
1982 மூன்றாம் பிறை (திரைப்படம்) பாலு மகேந்திரா கமல்ஹாசன், ஸ்ரீதேவி தமிழக அரசு திரைப்பட விருதும்,
சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் பெற்ற திரைப்படம் ஆகும்.
1985 பகல் நிலவு மணிரத்னம் முரளி, ரேவதி (நடிகை), சத்யராஜ்
1986 மனிதனின் மறுபக்கம் கே. ரெங்கராஜ் சிவகுமார், இராதா, ஜெயசிறீ
1988 ஜீவா (1988 திரைப்படம்) பிரதாப் சத்யராஜ், அமலா
1990 கிழக்கு வாசல் (திரைப்படம்) ஆர். வி. உதயகுமார் Karthik, ரேவதி, குஷ்பூ தமிழக அரசு திரைப்பட விருதுகள் -மூன்றாவது சிறந்த படம் ஆகும்.
1991 இதயம் கதிர் முரளி, ஹீரா
1992 என்றும் அன்புடன் பாக்கியநாதன் முரளி, சித்தாரா, ஹீரா
1993 வேடன் சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்) சரத்குமார், குஷ்பூ
1994 ஆனஸ்ட் ராஜ் கே. எஸ். இரவி விஜயகாந்த், கௌதமி, ஆமணி
1998 அரிசந்திரா செய்யாறு இரவி கார்த்திக், மீனா, பிரியா ராமன்
2003 பார்த்திபன் கனவு கரு பழனியப்பன் ஸ்ரீகாந்த், சினேகா தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுப் பெற்ற திரைப்படம் ஆகும்.
2006 எம் மகன் திருமுருகன் பரத், கோபிகா, நாசர்
2008 ஜெயம் கொண்டான் (திரைப்படம்) ஆர். கண்ணன் வினய், பாவனா, லேகா வாசிங்டன்
2010 பாணா காத்தாடி (திரைப்படம்) பத்ரி வெங்கடேசு அதர்வா, பிரசன்னா, சமந்தா
2016 தொடரி பிரபு சாலமன் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன்
2017 சத்ரியன் எஸ். ஆர். பிரபாகரன் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், ஜஸ்வர்யா தத்தா
விவேகம் சிவா அஜித் குமார், விவேக் ஒபரோய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன்
2019 விசுவாசம் சிவா அஜித் குமார்
2020 பட்டாஸ் ஆர். எஸ், துரை செந்தில் குமார் தனுஷ்
சினேகா
மெஹ்ரீன் பிர்சாதா

தொலைக்காட்சித் தொடர்கள் தொகு

கீழ்கண்ட தமிழ் நாடகத்தொடர்களை இந்நிறுவனம் எடுத்து ஒளிபரப்பியது. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஆண்டு, அந்தக் குறிப்பிட்டத் தொடர் ஒளிபரப்புத் தொடங்கிய ஆண்டினைக் குறிக்கிறது.

ஆண்டு தலைப்பு அலைவரிசை
1999 ஜெயிப்பது நிஜம் சன் தொலைக்காட்சி
2001-2002 கோபுரம்
2002-2003 வரம்
2003-2009 ஆனந்தம்
2009 கல்யாணம்
2009-2012 இதயம்
2012 ஆண் பாவம்
2012-2014 புகுந்த வீடு ஜீ தமிழ்
2012-2014 மாயா ஜெயா தொலைக்காட்சி
2015-2016 அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் ஜீ தமிழ்
2017-2019 சுமங்கலி சன் தொலைக்காட்சி
2020-ஒளிபரப்பில் திருமகள்

ஆனந்தம் தொகு

இத்தொடரானது, 2003-2009 என ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகியது. இதில் நடித்தவர்கள் : சுகன்யா, கமலேஷ், ஜானவி, சதீஷ், டெல்லி குமார் மற்றும் பலர். இயக்கம்: நித்யானந்தம். கதை :இராதாகிருஷ்ணன் என்பவர் புகழ் பெற்ற தொழில் அதிபர் ஆவார். இவரை ஆர்கே (RK) என அனைவரும் அழைப்பர். அவருக்கு பிறந்தவர் நால்வர். இந்த நான்கு பிள்ளைகளாலும், அவர் படும் இன்னல்களையும், வாழ்நிலைச் சூழல்களையும், இந்நாடகம் அழகுற வடிக்கிறது. அந்த நான்கு வாரிசுகளில், இரண்டாவது மகனான கார்த்திக்கை, சாந்தி என்ற விதைவைப் பெண், திருமணம் செய்து கொள்கிறார்i. அதற்காக அவள் சந்திக்கும் அவமானங்களும், அல்லல்களும் அழகுற எடுத்துக் காட்டப்படுகின்றன. அந்த விதவைக்கு ஒரு குழந்தையும் உண்டு. இப்போராட்டங்களுக்கு அடிப்படை, கார்த்தியின் அண்ணியான அபிராமி ஆவாள். ஏனெனில், அவள் தனது தங்கையை, கார்த்திக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறாள். அபிராமியின் தந்தை, ஆர்கேவின் தொழில் திறமையால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக, அபிராமி எண்ணுகிறாள். இப்படியாக வீட்டுக்குள்ளேயே நடைபெறும் உட்பூசல்களையும், அவை இறுதியில் சீராகி, ஆர்கே குடும்பமத்தில் ஆனந்தம் பொங்குகிறது. கதை, வசனம்: தேவி பாலா.

மேற்கோள்கள் தொகு

  1. "Sathya Jyothi Films announce their next mega project with Ajith Kumar". Nowrunning.com. 2022-01-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "When will Thala 57 start rolling? - Producer's Confirmation - Tamil Movie News". Indiaglitz.com. 26 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sathya Jyothi Films to produce Ajith Kumar's Thala 57". Behindwoods.com. 19 திசம்பர் 2015. 26 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://cinema.dinamalar.com/movie-review/2257/Vivegam/
  5. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19524626.ece
  6. "Venus Govindarajan passes away". Thehindu.com. 15 பிப்ரவரி 2007. 26 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. "A saga of success". Thehindu.com. 15 செப்டம்பர் 2006. 26 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_ஜோதி_படங்கள்&oldid=3583778" இருந்து மீள்விக்கப்பட்டது