ஹீரா ராசகோபால்
ஹீரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
ஹீரா ராசகோபால் | |
---|---|
பிறப்பு | ஹீரா ராசகோபால் திசம்பர் 29, 1971[1] இந்தியா |
பணி | நடிகர், வலைப்பதிவர், செயற்பாட்டாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–2000 |
வாழ்க்கைத் துணை | புஷ்கர் மாதவ் (2002–2006)(மணமுறிவு பெற்றவர்) |
வலைத்தளம் | |
http://www.heerarajagopal.com/index.html |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.
வாழ்க்கை
தொகுஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
திரைப்படங்கள்
தொகுசான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- ஹீராவின் இணையதளம் பரணிடப்பட்டது 2014-08-24 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹீரா ராசகோபால்