ரோஜா (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ரோஜா (Roja) திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரோஜா
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புகே. பாலச்சந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைமணிரத்னம்
சுஜாதா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅரவிந்த்சாமி
மதுபாலா
பங்கஜ் கபூர்
நாசர்
ஜனகராஜ்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்கவிதாலயா
பிரமிட் சாய்மிரா
வெளியீடு15 ஆகஸ்ட் 1992
ஓட்டம்137 நிமிடம்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

வகை தொகு

காதல்படம் / நாடகப்படம்

கதைச்சுருக்கம் தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த்சாமி). ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்(கள்)
ருக்குமணி எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
சின்ன சின்ன ஆசை மின்மினி, ஏ. ஆர். ரகுமான்
காதல் ரோஜாவே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன்
புது வெள்ளை மழை உண்ணிமேனன், சுஜாதா
தமிழா தமிழா ஹரிஹரன் மற்றும் குழுவினர்
சின்ன சின்ன ஆசை மின்மினி

விருதுகள் தொகு

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்
  • சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
  • சிறப்பு பரிசு (கூடுதல் பரிசு) - சிறந்த திரைப்படம்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்[2]

  • சிறந்த திரைப்படம் - முதல் பரிசு
  • சிறந்த இயக்குநர் - மணிரத்னம்
  • சிறந்த இசையமைப்பாளர் - ஏ. ஆர். ரகுமான்
  • சிறந்த பெண் பின்னணி பாடகர் - மின்மினி
  • சிறப்பு பரிசு (கூடுதல் பரிசு) - நடிகை மதுபாலா

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

மேற்கோள்கள் தொகு

  1. கோபாலகிருஷ்ணன், ச. (15 ஆகஸ்ட் 2020). "'ரோஜா' வெளியான நாள்: ரசிகர்கள் மனங்களில் வாடாமலர்". இந்து தமிழ். {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Film city to be ready soon: Jaya". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 19 சனவரி 1994. https://news.google.com/newspapers?id=8YNlAAAAIBAJ&sjid=j54NAAAAIBAJ&pg=930%2C138001. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_(திரைப்படம்)&oldid=3823922" இலிருந்து மீள்விக்கப்பட்டது