தளபதி (திரைப்படம்)

தளபதி (Thalapathi) (1991) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தளபதி
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புஜி.வெங்கடேஷ்வரன்
கதைமணிரத்னம்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
மம்முட்டி
ஷோபனா
அரவிந்த் சாமி
அம்ரீஷ் பூரி
பானுப்பிரியா
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு1991
ஓட்டம்137 நிமிடங்கள்
மொழிதமிழ்

வகை தொகு

நாடகப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்படுகின்றார் சூர்யா (ரஜினிகாந்த்). இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார். நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கிய பொழுது அவன் இறந்துவிடுகின்றான். இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார். ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார். பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். அச்சமயம் அங்கு புதியதாக பதவியேற்கும் அர்ஜூன் (அரவிந்த் சாமி) தேவ்ராஜின் குற்றச் செயல்களிற்காக அவரைக் கைது செய்ய ஏற்பாடுசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றார். சூர்யா இதனை அறிந்து அர்ஜூனைக் கொல்லச் செல்கின்றார். ஆனால் அர்ஜூன் தன் சகோதரர் என அறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். மேலும் அவரின் தாயாரின் கட்டளைப்படி சகோதரனான அர்ஜூனுக்கு கெடுதல் செய்யக் கூடாதென சத்தியம் செய்தவரென்பதால் அவ்வாறு நின்றார்.

பாடல்கள் தொகு

இராக்கம்மா கையத்தட்டு பாடல், பி.பி.சி. நடத்திய வாக்கெடுப்பின் படி உலகின் சிறந்த நான்காவது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இசையமைத்தவர் இளையராஜா ஆவார்.

துணுக்குகள் தொகு

  • இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன்), கர்ணா (சூர்யா), துரியோதனன் (தேவ்ராஜ்) போன்றவர்கள் மகாபாரதக் கதையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளபதி_(திரைப்படம்)&oldid=3710286" இருந்து மீள்விக்கப்பட்டது