ஏ. மோகன்
எடிட்டர் மோகன் என்று பரவலாக அறியப்படும் ஏ. மோகன் (Editor Mohan) (பிறப்பு:முகமது ஜின்னா அப்துல் காதர்) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.[1][2] எம். எம். மூவி ஆர்ட்சு, எம். எல். மூவி ஆர்ட்சு ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை இவர் வைத்திருக்கிறார்.
எடிட்டர் மோகன் | |
---|---|
பிறப்பு | முகமது ஜின்னா அப்துல் காதர் மதுரை, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1960–தற்போது |
பிள்ளைகள் | மோ. ராஜா, ஜெயம் ரவி உள்ளிட்ட மூவர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமுகமது ஜின்னா அப்துல் காதர் என்ற இயற்பெயர் கொண்ட படத்தொகுப்பாளர் மோகன் தமிழ்நாட்டின் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த தமிழ் இராவுத்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது மனைவி வரலட்சுமி மோகன்.[3][2] இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் மோகன் ராஜா ஒரு திரைப்பட இயக்குநர், அவரது பெரும்பாலான படங்களில் இளைய மகன் ஜெயம் ரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் இவரது மகள் ரோஜா ஒரு பல் மருத்துவர்.[4]
தொழில் வாழ்க்கை
தொகுமோகன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி ஏறத்தாழ 200 படங்களில் பணியாற்றினார். இவர் 10 தெலுங்குத் திரைப்படங்களையும், 5 தமிழ்த் படங்களையும் தயாரித்தார். மேலும் தெலுங்கிலிருந்து 60 திரைப்படங்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தார்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
தொகு- உதவி படத்தொகுப்பாளர்
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
- அரசிளங்குமரி (1961)
- குருவுனு மிஞ்சின சிஷ்யுடு (1963)
- நவக்கிரக பூஜை மகிமா (1964)
- அக்கி பிடுகு (1964)
- சிக்காடு தொரக்குடு (1967)
- கடலடு வதலடு (1969)
- படத்தொகுப்பு
- பிளஸ் ஒன் + 1 (2016)
- தயாரிப்பாளராக
- ஒரு தொட்டில் சபதம் (1989)
- மாமகாரு (1991)
- பாவ பாவமரிரி (1993)
- சுபமஸ்து (1995)
- ஹிட்லர் (1997)
- மானசிச்சி சூடு (1998)
- ஹனுமான் ஜங்க்சன் (2001)
- ஜெயம் (2003)
- தில்லாலங்கடி (2010)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Rayudu, Sakhamuri Venkata (21 September 2020). ""I may not be a Telugu, but my heart lies here"". theleonews.com. Archived from the original on 7 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.Rayudu, Sakhamuri Venkata (21 September 2020). ""I may not be a Telugu, but my heart lies here"". theleonews.com. Archived from the original on 7 August 2022. Retrieved 9 July 2022.
- ↑ 2.0 2.1 Kumar, Arun (29 January 2021). "Jayam Ravi Wiki, Age, Family, Biography, Images". TamilGlitz. Archived from the original on 24 July 2021. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.Kumar, Arun (29 January 2021). "Jayam Ravi Wiki, Age, Family, Biography, Images". TamilGlitz. Archived from the original on 24 July 2021. Retrieved 19 July 2022.
- ↑ "பாசக்காரப் பசங்க மதுரைக்காரங்க!". 14 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408231532/http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search. [Lovable Madurai Boys!]. Ananda Vikatan. 14 September 2011. Archived from the original on 8 April 2014. Retrieved 29 March 2014.
- ↑ "Jayam Ravi's parents turn writers". 24 November 2019 இம் மூலத்தில் இருந்து 9 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220709091757/https://www.thehindu.com/news/cities/chennai/jayam-ravis-parents-turn-writers/article30071154.ece.