அரசிளங்குமரி

ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அரசிளங்குமரி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் வரலாற்று சாகசத் திரைப்படமாகும். இப்படமானது ஏ. எஸ். ஏ. சாமி மற்றும் ஏ. காசிலிங்கம் ஆகியோரால் இயக்கப்பட்டது. ஜுபிடர் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எம். சோமசுந்தரம் தயாரித்தார். பிரித்தானிய எழுத்தாளர் ரஃபேல் சபாடினியன் எழுதி 1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்கேராமுச்சே என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1952 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியான திரைப்படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மு. கருணாநிதி வசனம் எழுத.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை முதலில் சாமி இயக்கி அதிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் எஞ்சிய பகுதிகள் காசிலிங்கத்தால் முடிக்கப்பட்டது. இது 1961 சனவரி, முதல் நாள் வெளியானது. இது வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

அரசிளங்குமரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
ஜுபிடர் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பத்மினி
வெளியீடுசனவரி 1, 1961
ஓட்டம்.
நீளம்17875 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உழவரான அறிவழகனின் (ம.கோ.இரா) தங்கை அன்புக்கரசியை (பத்மினி) நாட்டின் தளபதியான வெற்றிவேலன் (நம்பியார்) தான் சாதாரண போர்வீரன் என்று பொய் சொல்லி காதலிக்கிறார். இருவரின் காதலையும் ஏற்றுக்கொண்ட அறிவழகன் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. ஒரு காலகட்டத்தில் வெற்றிவேலன் மனைவியையும், குழந்தையையும் விட்டுச் செல்லுகிறார். பின்னர் அரசரின் மகளை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். அதற்கான சதி வேலைகளில் ஈடுபடுகிறார். இதை அறிந்த அறிவழகன் அவரின் சதி செயல்களை முறியடித்து தன் தங்கையுடன் அவரை சேர்த்து வைக்கிறார்.

நடிப்பு

தொகு

தயாரிப்பு

தொகு

பிரித்தானிய எழுத்தாளர் ரஃபேல் சபாடினியனின் 1921 ஆம் ஆண்டய புதினமான ஸ்கேராமுச்சேவை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. படத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. இந்தப் படத்தை முதலில் இயக்கியவர் ஏ. எஸ். ஏ. சாமி. அவருக்கு நடிகர்களுடனும் படக் குழுவினருடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படத்தலிருந்து விலகினார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிந்த நிலையில் அவருக்குப் பதிலாக ஏ. காசிலிங்கம் படத்தை நிறைவு செய்தார்.[4] இது ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இறுதிப் படமாகும்.[5]

பாடல்கள்

தொகு

திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி, இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[6]

பாடல்

தொகு

இப்படத்திற்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஆர். பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் எழுதினர்.[7][8] இப்படத்தில் இடம்பெற்ற "சின்னப் பயலே சின்னப் பயலே" பாடல் வரிகளை ஒத்த பெயரில் 2006 ஆண்டு திரைப்படமாக பின்னர் உருவாக்கபட்டது.[9][10]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 சின்னப் பயலே டி. எம். சௌந்தரராஜன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:39
2 ஏற்றமுன்னா ஏற்றம் டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் 03:11
3 கண்டி கதிர்காமம் ... கழுகுமலை பழனிமலை சீர்காழி கோவிந்தராஜன் 01:58
4 நந்தவனத்தில் ஓர் ஆண்டி டி. எம். சௌந்தரராஜன் 00:54
5 செத்தாலும் உனை நான் விடமாட்டேன் என். எஸ். கிருஷ்ணன் & எஸ். சி. கிருஷ்ணன் 03:32
6 தில்லாலங்கடி தில்லாலங்கடி பி. சுசீலா கண்ணதாசன் 03:32
7 தாரா அவர் வருவாரா எஸ். ஜானகி கு. மா. பாலசுப்பிரமணியம் 03:36
8 ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும் சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா இரா. பழனிச்சாமி 02:19
9 அத்தானே ஆசை அத்தானே பி. லீலா கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 02:10
10 தூண்டியிலே மாட்டிக்கிட்டு முழிக்குது கே. ஜமுனாராணி, சீர்காழி கோவிந்தராஜன் & எஸ். சி. கிருஷ்ணன் முத்துக்கூத்தன் 02:39
11 ஆவ் ஆஹாவ் என் ஆசை புறாவே ஆவ் பி. சுசீலா உடுமலை நாராயண கவி 03:23

வெளியீடும் வரவேற்ப்பும்

தொகு

அரசிளங்குமரி 1961 சனவரி முதல் நாளன்று வெளியானது.[11][12] கல்கியின் காந்தன் நம்பியாரின் ஒரே கதாபாத்திரத்தின் இரண்டு மாறுபட்ட நடிப்பைப் பாராட்டினார்.[13] திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. அதற்கு காரணம் திரைப்படம் தயாரித்து முடிக்க நீண்டகாலம் எடுத்துக் கொண்டதே என்றார் வரலாற்றாசிரியர் ராண்டார் கை.[4]

உசாத்துணை

தொகு
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. கை, ராண்டார் (June 16, 2016). "Arasilangkumari 1961". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on October 9, 2013. பார்க்கப்பட்ட நாள் March 19, 2017. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Rajadhyaksha & Willemen 1998, ப. 367.
  4. 4.0 4.1 Randor Guy (2 March 2013). "Arasilankumari 1961". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130910173801/http://www.thehindu.com/features/cinema/arasilankumari-1961/article4469179.ece. 
  5. "ஜுபிடர் சோமு மறைந்தார்". மாலை மலர். 17 June 2016. Archived from the original on 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  6. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 14.
  7. Neelamegam, G. (2016). Thiraikalanjiyam – Part 2. Chennai: Manivasagar Publishers. p. 14.
  8. அரசிளங்குமரி (PDF) (பாட்டுப் புத்தகம்). Jupiter Pictures. 1961. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.
  9. Vamanan (12 November 2018). "'புதிய பறவை'யும் திருட்டுப் பயல்களும் !". தினமலர். Nellai. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  10. Karthik (3 February 2006). "Thiruttu Payale". Milliblog!. Archived from the original on 14 October 2022. பார்க்கப்பட்ட நாள் 14 October 2022.
  11. "Arasilankumari". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 1 January 1961. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19610101&printsec=frontpage&hl=en. 
  12. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
  13. காந்தன் (22 January 1961). "அரசிளங்குமரி". Kalki. p. 50. Archived from the original on 22 July 2022. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசிளங்குமரி&oldid=3958530" இலிருந்து மீள்விக்கப்பட்டது