விஜய் சங்கர்

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

விஜய் சங்கர் (Vijay Shankar) (பிறப்பு 26 ஜனவரி 1991) இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக ஆடியவர் ஆவார். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராகவும், வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்.

விஜய் சங்கர்
2019-20 விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் விஜய் சங்கர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு26 சனவரி 1991 (1991-01-26) (அகவை 33)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நடுத்தரம்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 226)18 ஜனவரி 2019 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப27 ஜூன் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 74)6 மார்ச் 2018 எ. இலங்கை
கடைசி இ20ப27 பிப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–தற்போதுதமிழ்நாடு
2014சென்னை சூப்பர் கிங்ஸ்
2016–2017சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2018டெல்லி டேர்டெவில்ஸ்
2019சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2020 - தற்போதுசேலம் ஸ்பார்டன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப முத பஅ
ஆட்டங்கள் 12 9 41 64
ஓட்டங்கள் 223 101 2,099 1,539
மட்டையாட்ட சராசரி 31.85 25.25 47.70 37.53
100கள்/50கள் 0/0 0/0 5/15 2/8
அதியுயர் ஓட்டம் 46 43 111 129
வீசிய பந்துகள் 233 126 3,065 1,738
வீழ்த்தல்கள் 4 5 32 45
பந்துவீச்சு சராசரி 52.50 38.20 50.93 32.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/15 2/32 4/52 4/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 2/– 26/– 26/–
மூலம்: ESPNcricinfo, 26 ஜூன் 2019

உள்ளூர் தொழில் வாழ்க்கை

தொகு

தமிழ்நாட்டு அணிக்காக விளையாடிய காலங்களில் 2014-15 இரஞ்சி கோப்பை துடுப்பாட்ட போட்டியின் போது ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விதர்பாவிற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அவர் 111 மற்றும் 82 ஓட்டங்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். ஆட்டமானது முடிவேதும் எட்டாமல் போனாலும், தமிழ்நாடு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மகாராஷ்டிராவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அவர் 91 ஓட்டங்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இவருக்கு இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இந்த ஆட்டத்திலும் முடிவேதும் எட்டப்படாத நிலையிலும், தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த ஆட்டம் கை கொடுத்தது. கர்நாடகாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் 5 மற்றும் 103 ஓட்டங்களை எடுத்ததோடு, 92 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு இலக்கினைக் கைப்பற்றினார். இருந்த போதிலும், கர்நாடக அணி ஒரு முறை ஆட்ட நேர வெற்றியைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.[1]

அக்டோபர் 2018 இல் இவரது பெயர் 2018-2019 தியோதர் கோப்பைக்கான இந்திய சி அணிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[2] இந்தப் போட்டித் தொடரில் அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர் இவரேயாவார். மூன்று ஆட்டங்களில் 7 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.[3] இதைத் தொடர்ந்த மாதத்தில் 2018-2019 ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் கவனிக்கத் தக்க 8 நபர்களின் பெயரில் இவரது பெயரும் உள்ளது.[4]

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

2014 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு ஆட்டத்தில் விளையாடினார்.[5] 2017 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 4 ஆட்டங்களிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.[6][7] 2018 ஆம் ஆண்டு சனவரியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.[8] பின்னர் 2019 ஆம் ஆண்டில் மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்

தொகு

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்ட போது தூத்துக்குடி அணிக்காக விளையாடினார்.

அதன் பிறகு 2020 தூத்துக்குடி அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி என மாற்றப்பட்ட போது சேலம் அணி இவரை ஏலம் எடுத்தது .

சர்வதேசப் போட்டிகள்

தொகு

20 நவம்பர் 2017 இல், இவர் புவனேஷ் குமாருக்குப் பதிலியாக இலங்கைக்கு எதிரான தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளுக்கான இந்திய தேர்வு துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். ஆனால், விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.[9] 2018 பிப்ரவரியில், 2018 சுதந்திரக் கோப்பைக்கான இந்திய இருபதுக்கு20 அணியிலும் இவரது பெயர் இடம் பெற்றது.[10] மார்ச் 6, 2018 இல் 2018 சுதந்திரக் கோப்பைக்கான போட்டித் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது முதல் சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் ஆடினார்.[11] இவர் இத்தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரகீமின் இலக்கினை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[12] 2018 சுதந்திரக் கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் அவர் 32 ஓட்டங்களுக்கு இரண்டு இலக்குகளை கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் இந்தியா ஆறு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

சனவரி 2019 இல், தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியாவின் சர்ச்சைக்குரிய பதில்களைத் தொடர்ந்து அவர் தடை செய்யப்பட்டதால் அவருக்குப் பதிலாக 2018-19 இந்திய-ஆசுதிரேலியா தொடரின் மீதமிருந்த இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கெதிரான அனைத்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவற்றில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14] ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் தனது அறிமுகத்தை சனவரி 18, 2019 இல் ஆசுதிரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒரு நாள் போட்டியில் தொடங்கினார்.[15]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Eight players to watch out for in Ranji Trophy 2018-19". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  2. "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2018.
  3. "Deodhar Trophy, 2018/19: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  4. "Eight players to watch out for in Ranji Trophy 2018-19". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 November 2018.
  5. "Pepsi Indian Premier League, 37th match: Chennai Super Kings v Rajasthan Royals at Ranchi, May 13, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
  6. "All you need to know about Vijay Shankar". தி இந்து. 21 November 2017. http://www.thehindu.com/sport/cricket/all-you-need-to-know-about-vijay-shankar/article20609854.ece. பார்த்த நாள்: 21 November 2017. 
  7. "53rd match (D/N), Indian Premier League at Kanpur, May 13 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 21 November 2017.
  8. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
  9. "Bhuvneshwar, Dhawan released from India Test squad". ESPN Cricinfo. 20 November 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  10. "Rohit Sharma to lead India in Nidahas Trophy 2018". BCCI Press Release. 25 February 2018. Archived from the original on 25 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 25 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "1st Match (N), Nidahas Twenty20 Tri-Series at Colombo, Mar 6 2018,7.00PM". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
  12. "Dhawan, Unadkat brush aside Bangladesh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
  13. "2nd Match (N), Nidahas Twenty20 Tri-Series at Colombo, Mar 8 2018". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 
  14. "Vijay Shankar replaces Hardik Pandya in Australia, Shubman Gill added for New Zealand tour". HindustanTimes. 13 January 2019. https://www.hindustantimes.com/cricket/vijay-shankar-replaces-hardik-pandya-in-australia-shubman-gill-added-for-new-zealand-tour/story-yNJTQV62fkkWOdLjUKNFiP.html. 
  15. "India vs Australia 3rd ODI: Vijay Shankar to debut; India make three changes". The Indian Express (in Indian English). 18 January 2019. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.

வெளியினைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: விஜய் சங்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சங்கர்&oldid=3571947" இலிருந்து மீள்விக்கப்பட்டது