வருண் சக்கரவர்த்தி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.[1][2] இவர் பட்டியல் அ போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார்.[3] 2018-19 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்ட தொடரில் 9 போட்டியில் 22 இலக்குகளை கைப்பற்றினார்.[4] 2018-2019 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்டத் தொடரில் நவம்பர் 12, 2018 இல் நடைபெற்ற போட்டியில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[5]

வருண் சக்கரவர்த்தி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வருண் சக்கரவர்த்தி வினோத்
பிறப்பு29 ஆகத்து 1991 (1991-08-29) (அகவை 32)
பீதர், கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–தற்போது வரைதமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2019கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2020கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இருபது20
ஆட்டங்கள் 1 9 11
ஓட்டங்கள் 60 8
மட்டையாட்ட சராசரி 20.00 8.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 32 7*
வீசிய பந்துகள் 234 520 258
வீழ்த்தல்கள் 1 22 13
பந்துவீச்சு சராசரி 105.00 16.68 24.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/105 5/38 5/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 2/– 3/–
மூலம்: கிரிக் இன்ஃபோ]], 26 அக்டோபர், 2020

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

டிசம்பர், 2018 இல் நடைபெற்ற 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவரை 8.4 கோடி ரூபாய் மதிப்பில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஏலத்தில் எடுத்தது.[6][7] 2020 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.[8] அக்டோபர் 24, 2020 இலபுதாபில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[9]

சர்வதேச போட்டிகள் தொகு

அக்டோபர் 26,2020 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.[10]

சான்றுகள் தொகு

  1. "Varun Chakravarthy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  2. "Decoding the mystery: Who is Varun Chakravarthy?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  3. "Elite, Group C, Vijay Hazare Trophy at Chennai, Sep 20 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  4. "Vijay Hazare Trophy, 2016/17 - Tamil Nadu: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2018.
  5. "Elite, Group B, Ranji Trophy at Tirunelveli, Nov 12-15 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  6. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  7. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  8. "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPN Cricinfo. 20 December 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
  9. "Varun Chakravarthy took his first five-wicket haul". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 24 October 2020.
  10. "Rishabh Pant omitted from India's white-ball squads, Varun Chakravarthy in T20I squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.

வெளியிணைப்புகள் தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வருண் சக்கரவர்த்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_சக்கரவர்த்தி&oldid=3719170" இலிருந்து மீள்விக்கப்பட்டது