சாய் சுதர்சன்
சாய் சுதர்ஷன் என்றும் அழைக்கப்படும் பரத்வாஜ் சாய் சுதர்சன் (பிறப்பு 15 அக்டோபர் 2001) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர், [1] [2] தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். [3] [4] அவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழகத்திற்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | பரத்வாஜ் சாய் சுதர்சன் |
பிறப்பு | 15 அக்டோபர் 2001 சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
மட்டையாட்ட நடை | இடது கை |
பந்துவீச்சு நடை | நேர்ச்சுழல் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2021–தற்போது | தமிழ்நாடு |
2022–தற்போது | குஜராத் டைட்டன்ஸ் |
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 8 ஏப்ரல் 2022 |
2019/20 இல் பாளையம்பட்டி ராஜா கிண்ணப் போட்டிகளில், 52.92 சராசரியில் 635 ரன்களுடன் ஆழ்வார்பேட்டை துடுப்பாட்டக் கழகத்தின் முன்னணி ஆட்டக்காரராக இருந்தார். [5] அவர் 2021-22இல் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தமிழ்நாட்டிற்காக 4 நவம்பர் 2021 அன்று தனது முதலாவது இருபது20 போட்டியில் அறிமுகமானார். [6] 2021-22 விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாட்டிற்காக 8 டிசம்பர் 2021 அன்று பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டயில் அறிமுகமானார். [7] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கான ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸால் வாங்கப்பட்டார். [8] தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சுதர்சனின் ஆட்டம், ஐபிஎல் அணியில் அவரைத் தேர்ந்தெடுக்க வழிவகுத்தது. [9]
ஏப்ரல் 2022 இல், விஜய் சங்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். [10] சுதர்ஷனின் தந்தை டாக்காவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தடகள வீரர். அவரது தாயார் மாநில அளவிலான கைப்பந்து வீராங்கனையாக இருந்தார். [11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sai Sudharsan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
- ↑ "Know about Sai Sudarshan, a new cricketing talent from Tamil Nadu on the block". Cric Angel. 20 July 2021. Archived from the original on 6 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "TNPL-5: Sai Sudharsan lights up rain-abandoned clash". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
- ↑ "Sudharsan ton helps Rovers bag five points". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
- ↑ Penbugs (8 April 2022). "From Triplicane FCC to Gujarat Titans: Sai Sudharsan story". Penbugs (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Elite, Group A, Lucknow, Nov 4 2021, Syed Mushtaq Ali Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
- ↑ "Elite, Group B, Thumba, Dec 8 2021, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
- ↑ "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
- ↑ "Irfan praises Sai Sudharsan for seizing opportunity in Williamson's absence". Crickdom.news. 6 April 2023.
- ↑ "Who is Sai Sudharsan, and what's his back-story?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
- ↑ Venugopal, Ashok. "18-year-old Tamil Nadu cricketer has his target set". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ ராணி (2024-01-02). "ராகுல் டிராவிடிடம் பாராட்டு பெற்ற சாய் சுதர்சன் யார்?". www.ranionline.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.