தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (South Asian Games) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தெற்காசிய நாடுகளிடையே நடைபெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகளை தெற்காசிய விளையாட்டுப் பேரவை (SASC) என்ற அமைப்பு நடத்துகிறது. இவ்வமைப்பு 1983 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் ஆப்கானித்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கித்தான், இலங்கை ஆகிய எட்டு நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.
சுருக்கம் | SAG |
---|---|
முதல் நிகழ்வு | செப்டம்பர் 1984 காட்மாண்டு, நேபாளம் |
ஒவ்வொரு | 4 ஆண்டுகள் |
கடைசி நிகழ்வு | 1 - 10 டிசம்பர் 2019 காட்மாண்டு & பொக்காரா, நேபாளம் |
முதலாவது தெற்காசியப் போட்டிகள் 1984 ஆம் ஆண்டில் நேபாளத்தின், காட்மாண்டு நகரில் இடம்பெற்றன. தெற்காசியக் கூட்டாட்சி விளையாட்டுகள் என அழைக்கப்பட்டுவந்த இப்போட்டிகள் 2004 ஆம் ஆண்டில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.[1] இவ்விளையாட்டுப் போட்டிகள் பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளின் தெற்காசிய வகை எனக் கூறப்படுவதுண்டு. 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் குவகாத்தி, சில்லாங் ஆகிய நகரங்களில் 2016 பெப்ரவரி 5 முதல் பெப்ரவரி 16 வரை நடைபெற்றது. 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 1 டிசம்பர் முதல் 10 டிசம்பர் 2019 முடிய நேபாள நாட்டின் காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களில் நடைபெற்றது.
போட்டிகள்
தொகுஆண்டு | போட்டிகள் | நடத்திய நகரம் | நாடு |
---|---|---|---|
1984 | I | காட்மாண்டு | நேபாளம் |
1985 | II | டாக்கா | வங்காளதேசம் |
1987 | III | கொல்கத்தா | இந்தியா |
1989 | IV | இஸ்லாமாபாத் | பாக்கித்தான் |
1991 | V | கொழும்பு | இலங்கை |
1993 | VI | டாக்கா | வங்காளதேசம் |
1995 | VII | சென்னை | இந்தியா |
1999 | VIII | காட்மாண்டு | நேபாளம் |
2004 | IX | இஸ்லாமாபாத் | பாக்கித்தான் |
2006 | X | கொழும்பு | இலங்கை |
2010 | XI | டாக்கா | வங்காளதேசம் |
2016 | XII | குவகாத்தி, சில்லாங் [2] | இந்தியா |
2019 | XIII | காட்மாண்டு | நேபாளம் |
தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்
தொகுஆண்டு | போட்டிகள் | நடத்திய நகரம் | நாடு |
---|---|---|---|
2011 | I | அம்பாந்தோட்டை | இலங்கை |
தெற்காசியக் குளிர்காலப் போட்டிகள்
தொகுஆண்டு | போட்டிகள் | நடத்தும் நகரம் | நாடு |
---|---|---|---|
2011[3] | I | தேராதூன், ஔலி | இந்தியா |
தங்கப் பதக்கப் பட்டியல்
தொகுநாடு | ஒட்டுமொத்த வாகையாளர்கள் | 2வது தங்கம் | 3வது தங்கம் |
---|---|---|---|
இந்தியா | |||
பாக்கித்தான் | |||
இலங்கை | |||
நேபாளம் | |||
வங்காளதேசம் |
பதக்கப் பட்டியல்
தொகுஇடம் | தே.ஒ.கு | பங்குபற்றியவை | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 12 | 1388 | 634 | 316 | 2336 |
2 | பாக்கித்தான் | 12 | 323 | 412 | 393 | 1128 |
3 | இலங்கை | 12 | 210 | 351 | 553 | 1114 |
4 | நேபாளம் | 12 | 79 | 122 | 272 | 473 |
5 | வங்காளதேசம் | 12 | 67 | 177 | 403 | 647 |
6 | ஆப்கானித்தான் | 3 | 20 | 25 | 54 | 99 |
7 | பூட்டான் | 12 | 2 | 16 | 53 | 71 |
8 | மாலைத்தீவுகள் | 12 | 0 | 3 | 9 | 12 |
மேற்கோள்கள்
தொகு- ↑ It will be South Asian Games.Rediff news.April 2, 2004.
- ↑ "12th SAF Games Mantle Falls on State". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
- ↑ "South Asian Winter Games to have two opening and closing". The Times of India. 2010-11-25. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2011-08-01.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரபூர்வ தளம் பரணிடப்பட்டது 2013-06-03 at the வந்தவழி இயந்திரம்
- Pakistan Sports Board:South Asian Games பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்