1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது மூன்றாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (3rd SAF Games) இந்தியாவின் கொல்கத்தா நகரில் 1987 நவம்பர் 20 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்றது. மூன்றாவது தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் பத்து விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்க்க தெற்காசிய விளையாட்டுச் சம்மேளனம் தீர்மானித்தது. இப்போட்டியில் போட்டி நடைபெறும் நாடான இந்தியாவிலிருந்து 267 வீரர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் இருந்து 107 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. பாக்கிஸ்தான் இரண்டாமிடத்தையும் இலங்கை மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள்

தொகு

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 116
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 116
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 125
  • மொத்தப் பதக்கங்கள் -357

விளையாட்டுக்கள்

தொகு

அதிகாரபூர்வமாக 10 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

பதக்க நிலை

தொகு
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இந்தியா 91 45 19 155
2   பாக்கித்தான் 16 39 14 66
3   இலங்கை 4 7 23 34
4   வங்காளதேசம் 3 20 31 54
5   நேபாளம் 2 7 33 42
6   பூட்டான் 0 1 5 6
7   மாலைத்தீவுகள் 0 0 0 0

ஆதாரம்

தொகு
  • டெயிலிநியுஸ், நவம்பர் 19-30, 1987

வெளி இணைப்புகள்

தொகு